Tuesday, April 28, 2009

தேர்தல் செருப்பு(சிறப்பு) பட்டிமன்றம்


கலந்து கொள்பவர்கள்: இந்தியன் தாத்தா, இந்திய இளைஞன்
நடுவர்: நீங்கதான்
தலைப்பு :
தேரதலில் சரியான பாடம் புகட்டுவது: செருப்பா? அல்லது ஓட்டா?


இந்த தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு மக்கள் பிரச்சனைகளை விட செருப்பு பிரச்சனை விசுவரூபம் எடுத்துக் கொண்டிருப்பது நாமறிந்ததே. இவ்வுயரிய (அ) நாகரீக கலாச்சாரத்தை துவக்கிவைத்த ஈராக்கிய செய்தியாளனுக்கும், இன்றுவரை செருப்பை பெருங்கருப்பாய் காட்டிவரும் ஊடகங்களுக்கும் இந்த பட்டிமன்றம் அர்ப்பணம். (நிறைய பேரை பேச அழைத்திருந்தோம். அவர்கள் பொறுப்புக்கும் செருப்புக்கும் பயந்துவரவில்லை. அதுவும் நல்லதுதான்)

நடுவர்: பெரியோர்களே! அவையோர்களே மற்றும் பெருமதிப்பிற்குரிய பதிவோர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த பட்டிமன்றதின் தலைப்பு
தேரதலில் சரியான பாடம் புகட்டுவது: செருப்பா? அல்லது ஓட்டா ?
என்பதாகும். ஓட்டு என்று வாதிட தாத்தாவும், செருப்பே என்று வாதிட இளைஞரும் வந்துள்ளனர். வளவளவென்று கூறி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இருவரைப் பற்றீய அறிமுகம் கூட தேவையில்லை என்றே நினைக்கிறேன். இப்பட்டிமன்றத்தின் நோக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது. இப்பட்டிமன்றத்தின் விதிப்படி இருவரும் நான்கு அல்லது ஐந்துவரிகளுக்கு மிகாமல் பேச வேண்டும்.( இல்லையேல் இப்போதே பாதி பேர் வின்டோவை மூடிவிடுவார்கள்). சரி விவாதத்தை யார் துவங்குகிறீர்கள்?

தாத்தா: இளைஞர்கள் துடிப்பானவர்கள். எனக்கு பொறுமை இருக்கிறது. ஆகவே இளைஞரே முதலில் பேசுவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை.

இளைஞர்: எனது விவாதத்தை பிஸ்கு அண்ணாவின் கவிதையோடு ஆரம்பிக்கிறேன்.

வெறுப்பிருந்தால் செருப்பிருக்கு
நெருப்பு இருக்கிறதா
உன்னிடம்???

இன்றைய போலி ஜன நாயக நாட்டில் செருப்புதான் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டும்.

தாத்தா: நெருப்பு இருக்கும் இளைஞனே உனக்கு பொறுப்பு இருக்கிறதா? பெரிய பருப்பு மாதிரி பேசுவதில் புண்ணியமில்லை. செருப்பு வீசினால் ஒரு நாள் மட்டுமே சந்தோசம். நீ ஓட்டு போடாவிடில்.........??? அவனுக்கல்லவா சந்தோசம். உன் பெயரில் கள்ள ஓட்டு .........அப்புறம் உன் பாடு.

இளைஞர்: இளைஞர்களிடம் உங்களைப் போன்ற பழுத்த கிழங்களின் பருப்பு வேகாது என்பதுதான் உண்மை. எத்தனை முறை நாம் ஓட்டு போட்டாலும் அரசியல்வாதி திருந்த மாட்டான். ஒரு செருப்படி நடத்திவிடும் பல உருப்படியானவற்றை

தாத்தா: தம்பி! உங்களிடம் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை. விவேகம் முளைத்தால்தான்.........
( நடுவர் குறுக்கிட்டு)
நடுவர்: நானும் இருக்கேன் என்பதை மறந்து அரசியல் பேசாதீங்க தாத்தா. இது பட்டி மன்றம். ஆகவே அரசியல் கலப்பு இல்லாமல் எவரையும் உங்கள் வார்த்தைகளில் நினைவுபடுத்தாமல் பேசுங்கள்

தாத்தா: சரி, நடுவரே! தம்பி நீ செருப்பை பற்றி யோசிப்பதற்கு முன் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பாய் கொஞ்சம் யோசி. நாட்டின் நாளைய எதிர்காலம் உங்கள் கையில்தான் மறந்துவிடாதே.

இளைஞர்: பொறுப்பாய் யோசிப்பதால் தான் செருப்பு. இவர்கள் அரசியலை விட்டு போனால்தானே நாங்க வரமுடியும். செருப்பைப் பார்த்தாலாவது அடுத்த முறை ஒதுங்குவார்கள் அல்லவா? எங்களுக்கு செருப்பு கால் தூசி. ஆனால் அவர்களுக்கு பெரும் மானப் பிரச்சனை. அதனாலேதான்..........

தாத்தா: நீ சொல்வது கொஞ்சம் உண்மை எனினும் செருப்பு வீசினால் அடுத்த நாள் மட்டும் உன் பெயர் செய்தித்தாளில் வரும். நீ பலபேரை ஒழுங்காக ஓட்டுப் போடச் செய்தால்...........
அது நல்ல பலனைத்தருமே!

இளைஞர்: ஓட்டுப் போட்டு இந்தியா அடைந்த இலட்சணத்தைத்தான் நாம் 60 வருடங்களா பார்த்துகிட்டு இருக்கோமே! ஓட்டுப் போட நான் தயார். ஆனா நான் ஓட்டுப் போட உருப்படியான ஒருவனை நீங்க கைகாட்டுங்க பார்க்கலாம்.

நடுவர்: தம்பி, இதோ சென்னையில கூட சரத்பாபுன்னு ஒருத்தர் நிற்கிறாரேப்பா.! மறந்துட்டியா?

இளைஞர்: நல்ல ஓட்டு போட வழி கேட்டால் கள்ள ஓட்டுக்கு வழி சொல்றீங்க. ஓட்டு இருக்கிற எல்லாரும் தென்சென்னைக்குப் போய்தான் ஓட்டுப் போடனுமா என்ன? சுயேட்சை தானே அவரு. ஒவ்வொரு பெரிய கட்சியும் கிரிமினல்களையும், அதைச் செய்து கோடீஸ்வரன்களானவர்களைத்தானே நிப்பாட்டுது?

தாத்தா: விதண்டாவாதம் செய்தால் புண்ணியமில்லை. இருப்பவனில் நல்லவனுக்கு ஓட்டுப் போடு.

இளைஞர்: எதற்கு? அவனும் அந்த சாக்கடையில் கிடந்து ஊறி நாறுவதற்கா?

தாத்தா: ஏன் கம்யுனிஸ்டுகள் இல்லையா?

இளைஞார்: இருக்கிறார்கள். ஆனால் மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் மற்றும் கேரளாவிலும் அவர்கள் சாதித்தது என்ன? மற்ற மாநிலங்களைவிட அவை பின் தங்கியல்லவா இருக்கிறது.

தாத்தா: தம்பி நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுதான்னு அடம் பிடிக்காதே. பொறுப்பை யுணர்ந்து வெறுப்பை உன் ஓட்டில் காட்டு.

இளைஞர்: அடியாத மாடு பணியாதாம்! பழம் பெருசுகள் சொல்லியிருகிறார்கள். அதனால........

நடுவர்: நான் ஒருவன் இங்கே இருப்பதையே வசதியாக நீங்க இருவரும் மறந்து விட்டீர்கள். உங்க பாட்டூக்கு பேசிகிட்டே போனால் ..... அப்புறம் யார் படிப்பது. சாரி முடிப்பது. அதனால நானே முடிக்கிறேன். விளக்கமா கூறி வில்லங்கம் பேச விரும்பவில்லை.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

எனது தீர்ப்பும் கூட இதுதான்

அஸ்கு: என்னண்ணே! நடுவர் இப்படி எஸ்கேப் ஆகிவிட்டார். அவர் யாருக்கு சாதகமா தீர்ப்பு சொல்லியிருக்கார்.

பிஸ்கு: இதற்கு என்னுடைய பதில்:மறைந்த எழுத்தாளர் சுஜாதா 'கடவுள் இருக்கிறாரா?' என்ற புத்தகத்தில் கடைசியாக கூறிய அவரது பதில்தான்.

அஸ்கு: ஐயோ.... முடியல...... அண்ணா ப்ளீஸ் கொஞ்சம் விவரமா.........

பிஸ்கு: IT DEPENDS


பிடிச்சிருந்ததா ஓட்டுப் போடுங்க.... பிடிக்காட்டியும் கருத்தை எழுதுங்க

Monday, April 27, 2009

கூகுள் படுத்தும் பாடு தாங்க முடியலை


வலைதளங்களில் கூகுள் பண்ணும் ரவுசும் புதுமையும் விளக்கி விவரிக்கவியலாவண்ணம் வியக்கும்படி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சொல்லி அடிப்பது ஒரு கலை இவர்கள் சொல்லாமல் அடிக்கிறார்கள், கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். விவரமறிய........

கடந்த இரு தினங்களாக கூகுள் தேடலுக்காக அப்பக்கம் சென்றபோது கூகுள் பக்க முகப்பு வித்தியாசமாக இருந்தது. நீங்களும் கவனித்திருப்பீர்கள். ஏதோ சிறிய கோடுகள்ம் புள்ளிகளும் மாத்திரம் தெரிந்தது. நான் எனது பிரவுசர் கோளாறு என்று நினைத்து விட்டுவிட்டேன். ஒவ்வொரு முறை தேடும் போதும் எனக்கு அது கேள்விக்குறியாகவே இருந்தது. உண்மை என்ன என்று அதில் மவுஸை வைத்து கிளிக்கினார் சாமுவேல் மோர்ஸ் என்பவரைப் பற்றீய விக்கிப்பேடியா தளத்திற்கு என்னை இட்டுச் சென்றது. பிறகுதான் தெரிந்தது, மோர்ஸ் கோட் எனப்படும் தந்தி சேவைக்கு பயன்படுத்தப்படுகிற கோட் முறையை கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் என்பவரின் பிறந்த நாள் ஏப்ரல்27 என்பதினாலும் அவரை நினைவுபடுத்தி பெருமைப்படுத்தவே கூகுள் இவ்வாறு செய்திருக்கிறது என்றும் அறிந்தேன். மோர்ஸ் கோட் உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கிறது. நல்ல ஒரு லாட்டரல் திங்கிங். யாராவது இரகசியம் காக்க தாராளமாக மோர்ஸ் கோடை பயன்படுத்தலாம் என்று நோபல் பரிசு பெறாத நான் பரிந்துரைக்கிறேன். கீழே நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

- .... .- -. -.- -.-- --- ..-

மோர்ஸ் கோடுக்கும் நாம் இன்று கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் பைனரி இலக்க முறைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. விவரமறிந்த வித்துவான்கள் விளக்கினால் அவர்களுக்கு எனது ஓட்டு உண்டு. கீழே மோர்ஸ் கோட் விளக்கப் படம்.


அஸ்கு: பிஸ்கு அண்ணா, மோர்ஸ் கோட் என்ற ஒன்று இருப்பதே எனக்கு இன்றுதான் தெரியும்.

பிஸ்கு: அவரை மற்ற நாடுகள் எல்லாம் பெருமைப்படுத்திய பின் தான் அமெரிக்கா அவரை கனப்படுத்தியது என்பதும் எனக்கு இன்றுதான் தெரிந்தது.

அஸ்கு: இது குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

பிஸ்கு: நம்ம நாட்டுல உள்ளவங்க இங்கே ஒன்றையும் செய்ய முடியாமல் வெளி நாட்டிற்கு சென்று சாதித்த பின் அவர்களை எங்கள் மண்ணின் மைந்தர் என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் இந்திய அரசுதான். (கல்பனா சாவ்லா, அமர்த்தியா சென், சபீர் பாட்டியா...)

அஸ்கு: மேலை நாடுகள் போல இங்கே புதுக் கண்டுபிடிப்புகள் ஏதும் வரமாட்டேங்குதே. ஏன்?

பிஸ்கு: அவர்கள் கண்டுபிடிப்பில் வல்லவர்கள். இங்கே குறை கண்டுபிடிப்பதில் வல்லவர்கள் அதான். இங்கே ஒருவன் ஏதாவது புதிதாக கண்டு பிடிக்க நினைத்தால் அவனுக்கு உதவி கிடைக்காமலிருப்பது ஒரு பக்கம் என்றால் அவன் படும் போராட்டங்கள் ஏளனங்கள் இப்படி எல்லாம் ஒன்று சேர்ந்து அவனை ஆராய்ச்சியிலிருந்து துரத்திவிடுகின்றன. அப்படியும் அவன் ஏதாவது சாதித்துவிட்டால் பண முதலைகள் அவனை விழுங்க காத்துக் கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளில் ஒருவன் புதிதாக் கண்டு பிடிக்க முனைந்தால் அவனுக்கு எல்லாரும் ஒத்துழைப்பார்கள். அப்படி பலர் ஒத்துழைத்ததின் விளைவுதான் இந்த கூகுள் தேடல் பக்கமும் கூட.

அஸ்கு: நம் நாட்டில் இப்படி நடக்க என்ன செய்யணும்?

பிஸ்கு: -.. .-. . .- --

இலங்கை போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்க காரணம்


போர் நிறுத்தம் கோரி கலைஞர் உண்ணாவிரதம் இருந்து பின்பு இலங்கை அரசின் அறிவிப்புக்கு பின் அதை முடித்துக் கொண்டார். இலங்க உடனடியாக போரை முடிக்க காரணம் என்னவெனில்,
இந்திய அரசாங்கத்தில் இருந்து நிர்ப்பந்தம் வரும் முன்பாகவே ஏற்கனவே இறுகியிருக்கும் இதர உலக நாடுகளின் கண்டனங்களிலிருந்து தப்பிப்பதற்காகவே.

இவ்வளவு நாள் போராடியும் அப்பாவித்தமிழர்களின் உயிரைத்தான் குடிக்க முடிந்தது. விடுதலைப் புலிகளின் தலைவரை பிடிக்க முடியவில்லை. இதனிடையே பிரபாகரன் தப்பிச் சென்று விட்டதாக அவர்கள் இராணுவத்திலேயே கடற்படையும் தரைப்படையும் ஒருவரையொருவர் குற்றம் சாட்ட்சிக் கொண்டிருப்பதால் இன்மேல் போரை நடத்தி பிரயோஜனம் இல்லை என்று ராஜபக்சே கைவிட்டுவிட்டார் என்பதற்கு அதிக காரணங்கள் இருக்கிறது.

எது எப்படியோ நடந்தது நல்லதே. நடக்கப் போவதும் நல்லதே.

அஸ்கு: என்னண்ணே? இப்படி உடனடி போர் நிறுத்த அறிவிப்பு.

பிஸ்கு: இதற்கு பின்னால் யார் என்பது நாமறியோம். ஆனால் என்ன, இது காக்கா உக்காந்து பனம் பழம் விழுந்த கதையாக இருக்குமோ என்ற சந்தேகம்தான் எனக்கு.

அஸ்கு: அப்படி என்ன சந்தேகம்?

பிஸ்கு: பொறுத்திருந்து பார்ப்போம். சீக்கிரத்தில் இலங்கை அரசே செய்திக் குறிப்பில் வெளியிடும்

In Colombo, the Sri Lankan Presidential Secretariat issued a statement announcing that combat operations against the LTTE had concluded.
The following is the text issued by the Presidential Secretariat, Colombo

Statement by the Sri Lankan Government on the Security situation

Government of Sri Lanka has decided that combat operations have reached their conclusion. Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.

Our security forces will confine their attempts to rescuing civilians who are held hostage and give foremost priority to saving civilians.

April 27, 2009
Presidential Secretariat
Colombo

Sunday, April 26, 2009

இந்திய தேர்தல் எதிரொலி இலங்கை போர் நிறுத்தம்??

இன்று காலை கலைஞர் அவர்கள் உண்ணாவிரதம் ஆரம்பித்திருப்பது அனைவரும் தெரிந்ததுதான். அவர் உண்ணாவிரதம் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே அப்படிப்பட்ட நிலையை அவர் எடுப்பார் என்று ஆரூடம் சொல்லப்பட்டது.

தேசிய அளவில் இதுவரையிலும் இலங்கப் பிரச்சனை பேசப்படாமல் இருந்தது. இப்போது தமிழக தேர்தல் நெருங்கிவிட்டதால் தமிழகத்தின் பிரச்சனைகளை பேச வேண்டிய கட்டாயம் பிஜேபிக்கும் உள்ளது. ஆகவே அவர்களும் இப்போது களத்தில் குதித்துள்ளனர்.(கவனிக்க:அத்வானி பேட்டி)

தமிழகத்தில் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் இலங்கைப் பிரச்சனையையே அம்மையார் முழங்குவதாலும், இதுவரை தோன்றாத ஞானோதோயம் ஒரு குருஜியின் சிடியைப் பார்த்தவுடனே வந்ததாகவும் சொல்லிக் கொள்ளும் அம்மையார் இதுவரை உண்மை உரைத்த தமிழர்களை எல்லாம் முட்டாளாக்கி தெர்தலில் வெற்றி பெற்று எல்லாரையும் முட்டாளாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். மக்களை முட்டாளாக்குவதில் கலைஞரை யாராகிலும் மிஞ்ச முடியுமா என்ன? அல்லது அதற்கு 'கை' கொடுப்பவர்கள்தான் விட்டுவிடுவார்களா?

எத்தனையோ முறை அறிக்கையிஉலும் பேட்டிகளிலும் தனது உயிரை தமிழுக்காக கொடுத்த கலைஞர் வாழப்போவது இன்னும் கொஞ்ச சில நாட்கள். அதில் பெரிதாக சாதிக்கப் போவது எதுவுமில்லை. எனவே தனது உயிரை உண்மையாகவே பொருட்படுத்தாது உண்ணாவிரத முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது நல்ல பலனைத்தரும் என்று அரசியல் ஜோசியர்கள் கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சியும் அடுத்த முறை ஆட்சிக்கு வர சில சீர்கள் தேவைப்படுவதால் தனது கொல்லும் கொள்'கை'யை ஒரு ஓரமாக வைத்துவிட்டு இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை இன்று மாலைக்குள் எடுக்கும் என்று நம்பப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம். ஜெயிப்பது உண்ணாவிரதமா அல்லது எமனா என்று?

அஸ்கு: உண்ணாவிரதம் நல்ல பயன் தருமா?

பிஸ்கு: நிச்சயம் பயன் தரும். ஆனால் தாயகத்தில் அப்படி இருக்கும் 11 பேரையும் கூட்டி பக்கத்தில் வைத்துக் கொண்டு இருந்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும். இப்போ அவர்கள் இதுவரை இருந்தது உருட்டடிப்பு செய்யப்பட்டுவிடும்.

அஸ்கு: இலங்கை காங்கிரஸ் குரலுக்கு செவிகொடுக்குமா?

பிஸ்கு: அமெரிக்க காங்கிரஸ், மற்றும் ஐநா சபைக்கு செவிமடுக்காத இலங்கை காங்கிரஸ் குரலுக்கு செவிமடுக்கும். ஆனால் இப்போதல்ல. எல்லோரையும் கொன்று முடித்த பின்பு.


Saturday, April 25, 2009

தேர்தல் போட்டியில் கிளீன் போல்ட் ஆன கிரிக்கெட் போட்டி


அப்படியும் இப்படியுமாக ஒரு வழியாக ஐ.பி.எல்.கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் வைத்து நடத்தினால் பாதுகாப்பு பிரச்சனை என்று கூறி யாரும் அதை வைத்து அரசியல் பண்ண முடியாதபடி ப.சி செய்துவிட்டாலும் இரசிகர்களின் கிரிக்கெட் பசியை தீர்க்க கங்கணம் கட்டிக் கொண்டு கிரிக்கெட்டு வாரியம் அதை நடாத்திவருவது நாமறிந்ததே.

இப்போது இந்தியாவில் நடைபெறும் அரசியல் பலப்பரீட்சையில் கிரிக்கெட் போட்டிகளை விட மக்கள் தேர்தல் கூத்துக்களைத்தான் அதிகம் பார்ப்பதாக தனியார் கருத்துக கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இதனால் கிரிக்கெட் போட்டிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க ஓவர்களை இருபதிலிருந்து ஐந்து அல்லது பத்து ஓவர்களுக்க் கூட குறைக்கலாம் ஐபிஎல்.

நினைத்தது நடந்துகொண்டிருப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு சந்தோசம், பாஜகவிற்கு வயிற்றெரிச்சல், ஐபிஎல்லுக்கு கவலை. இவை நமக்கு ஒரு சிறிய கொசுறு செய்தி. அவ்வளவே!

அஸ்கு: கிரிக்கெட்டை விட தேர்தலை மக்கள் விரும்புவது நல்ல விசயம் தானே?

பிஸ்கு: ஆமா, ஆமா நல்லதுதான். ஏன்னா கிரிக்கெட் கோமாளித்தனத்தை எப்பவேணா பாத்துக்கலாம், ஆனால் தேரதல் காமெடியை ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதானே பாக்க முடியும்.

அஸ்கு: கிரிக்கெட்டில் வீனாப் போகுது நம்ம நேரம், தேர்தலில்........?????

பிஸ்கு: சதேகமேயில்லை. வாக்குறுதிகளும், அதை நம்பும் நம்மைப் போன்றவர்களின் வாழ்க்கையும்தான்

அஸ்கு: அப்போ எதுக்கு தேர்தல் நடக்கணும்??????

பிஸ்கு: ஆங். நல்லக் கேள்வி? ஆனா பதில்தான் சொல்ல முடியாது. ஏனெனில் இது ஜனநாயக நாடு

Thursday, April 23, 2009

கருணாநிதி கவிதைக்கு எதிர்கவிதை: ஒன்றுகூடினோம் கொன்றே தீருவோம்
திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள ஒன்று கூடுவோம் வென்றே தீருவோம் கவிதைக்கு எதிர்கவிதை


உணர்ச்சியுள்ள தமிழரெல்லாம் ஒன்று கூடுவோம்
உயிர்ப் பலியாகும் ஈழத் தமிழர்க்காக என்றும் வாடிக்கொண்டிருகிறோம்
செல்வா காலம் முதல் சிங்களர் ஆதிக்கம் வீழ்த்த பரணி பாடினோம்
சிறைச்சாலை, சிம்மாசனம் இழப்பு என்று கூறி நடிக்கும் தலைகள் கண்டு வாடினோம்

ஈழ விடுதலைப் போருக்கு இந்திரா காந்தியும் ராஜீவும் இணக்கம் தந்தனர்
அதன் பின்பு வந்தவர் சுணக்கம் காட்டி சுண்டிவிட்டனர்.
விடுதலைப் புலிகள் போராளிகள் என்று முழங்கியோர்
இன்று அவர்களைக் காறுகின்றனர் கரும்புள்ளிகள் என்று
தலைவனை வீழ்த்தினதால் தமிழ்தலைவனது சாவை விரும்புகின்றர்
அதற்Kஆக நம்மை தனிழக தலைவர்களே பிரிக்க முயல்கின்றனர்


சிங்களத்து வெறியர்களால் சீரழிந்து போனதய்யா
ஈழத தமிழர்களின் உரிமை
அதை ஒத்துக் கொள்ள மறுத்து
அவர்களுக்கு ஒத்தூதும் நம் அரசியல் சாணக்கியர்கள்
யாரை ஆதரிக்கிறார்கள் எவரை பிரிக்கிறார்கள்

இவர் போல் ஏமாற்றி, எம்மவரின் சாவில் குளிர்காயும்
இழிஞரின் சூழ்ச்சி கண்டு
இனியும் நாம் சும்மா இருக்க இயலாமல்
இலங்கைத் தமிழர் இல்லாமல் போவதற்கு முன்பு
இறைவனை வேண்டி தமிழராஇ நாம் கூடுவோம்
காங்கிரஸ் கட்சி காக்காது நம் சோதரரை
அவரிடம் கூவி கூவி அறிக்கைவிடுவார்
ஆனால் கேவிக் கேவி அழுவதோ தமிழினமல்லவா
இவர் கூவி விடியல் வந்துவிடப் போவதில்லை
இவர் கூறி தமிழினமும் அழியப் போவதில்லை

முன்னுக்குத் தள்ளி முடிப்போம் இலங்கைப் போரை என்றால்
இங்குள்ள சில பேர் தடையாக இருந்து இராவணனுக்கு தம்பியாக
இழிதகை விபீஷணன் பாத்திரம் ஏற்கலாமா? தமிழ் அரசியல்
துரோகிகளின் சேட்டையினால் தூய தமிழினம் தோற்கலாமா?

கபட நாடகமென்று கதைப்போர் ஒலியை நம் காதுகளில் ஏற்கலாமா?
அதனாலே
அன்றும் என்றும் இன உணர்வு மிகுந்த தமிழரெல்லாம்
ஒன்றாய்க் கூடுவோம்! வென்றே தீருவோம்.

அஸ்கு: அண்ணே கவித எல்லாம் எழுதுறீங்க. எப்படிண்ணே!

பிஸ்கு: ரொம்ப சிம்பிள். வரிகளை வெட்டி வெட்டி எழுதினா கவிதை. நீட்டமா எழுதினா உரைநடை, யாருக்கும் புரியாதபடி எழுதினா தொல் இலக்கியம்.

அஸ்கு: யாருக்குமே புரியாதபடி பேசினா??????/

பிஸ்கு: அப்படிப் பேசுறவன் லூசா இருக்கணும்........இல்லன்னா இந்திய அரசியவாதியா இருக்கணும்.

அஸ்கு: இந்த இரண்டுமே இல்லன்னா?????

பிஸ்கு: அப்ப அது நீதான்....

இந்தியாவைப் பற்றி பெருமையாய் பீத்திக் (பேசிக்) கொள்ள சில விசயங்கள்


உலக வரலாற்றில் இந்திய நாடு இதுவரைக்கும் எந்த நாடு மீதும் படையெடுத்ததில்லை.
(ஏனெனில் உட்சண்டைகளை கவனிக்கவே நேரம் போதவில்லை இன்றளவும்)

செஸ் விளையாட்டு இந்தியாவில்தான் கண்டு பிடிக்கப்பட்டது.
( நல்லவேளை!!! செஸ்க்கு நடுவில் 'க்' வைத்திருந்தால்.........?????????)

உலகத்திலேயே தபால் நிலையங்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம்.
( நோ கமெண்ட்ஸ்.)

பிரிட்டிஷ் காரர்கள் இந்தியா வருவதற்கு முன்னால் உலகிலேயே பணக்கார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்தது.
(அன்று வெள்ளைக்காரன் கொள்ளையடித்தான்,
இன்று கோடீஸ்வரன் கொள்ளையடிக்கிறான். வித்தியாசம் இதுதான்)

கி.பி.1886 வரைக்கும் வைரம் இந்தியாவில் மட்டும்தான் வெட்டி எடுக்கப்பட்டது. முழு உலகமும் இந்திய வைரம்தான்.

(இன்னைக்கு முழு உலகிலும் வைரம் கிடைக்குது, ஆனா இந்தியாவிலதான் இல்லை)

யூதர்களும் கிறிஸ்தவர்களும் கி.மு200 மற்றும் கி.பி52 ஆண்டுகளில் இருந்தே இந்தியாவில் வசித்துவருகின்றனர்.
(இன்றளவும் மைனாரிட்டியாகவே)

பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில்தான் உலகத்திலேயே மிகப்பெரிய புண்ணியஸ்தலம். இது மெக்கா மற்றும் ரோம் நகரைவிட பெரிது. ஏழுமலையானின் தினசரி சராசரி வருமானம்.......(சொல்ல மாட்டேன் கோடிகளின் எண்ணிக்கையை) உலகத்துலேயே ரொம்ப வருமானம் பாக்கும் சாமி இவருதான்[இவரை வச்சு யாரு வருமானம் பண்ணுறாவலோ?]) தினசர் வருபவர்கள் குறைந்தது 30000பேர். (ஐயா, அதவானி இதுபோல கோயில்கள் மடங்களில் சேரும் பணங்களை உருப்படியா செலவழிக்க ஏதேணும் திட்டம் யோசிக்கக் கூடாதா)

உலகத்துலேயே அதிக எண்ணிக்கையில் அரசியல் கட்சிகள் இருப்பதும் இந்தியாவில்தான். ( இந்தப் பெருமையை காப்பாற்ற ஒவ்வொருவரும் கட்சி துவங்கவேண்டும். ஆனா கொள்கையைப் ப்ததி மட்டும் பேசக் கூடாது)

உலகவரலாற்றிலேயே முதன் முறையாக என்ற சொற்றோடரை அதிகம் பயன்படுத்தும் டிவிசேனல்கள் இந்தியாவிலதான் அதிகம்.( இதை விட பெரிய வார்த்தை வேறு ஏதாவது இருந்தா சொல்லுங்க)

அஸ்கு: அண்ணே ஒரு பெரிய நாடான இந்தியாவின் பெருமைகள் இவ்வளவுதானா?

பிஸ்கு: இல்லையில்லை. சொல்லிக் கொண்டே போகலாம். ஆனா எனக்கு பெருமைகளை விட மக்களின் வறுமையும் அறியாமையும்தான் ரொம்ப முக்கியமானதாக படுகிறது.
உலகதுல முதல்முறையா குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வந்தது இந்தியாதான். இன்றளவும் அது முழுவெற்றியடையவில்லை. ப்ல நல்ல திட்டங்கள் வந்தாலும் அறியாமையினால் அவை வெறும் அறிவிப்புகளாக நின்றுவிடுகின்றன. பல திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்றடைவதில்லை. நிர்வகச் செலவுக்கே நூற்றூக்கு 90 சதவீதம் செலவு ஆகிவிடுகிறது. கம்யுனிஸ்ட்களும் கூட இதுவரைக்கும் உருப்படியா எதையும் சாதிக்கலை. (உதாரணம்- மேற்குவங்கம், கேரளா). மெலும்.......

அஸ்கு: அண்ணே போதும்..போதும்... நிறுத்துங்க..........அழுதுருவேன்.

பிஸ்கு: இந்தியாவின் உண்மையான நிலை நினைத்தால் கண்ணீர்தான்

Tuesday, April 21, 2009

செருப்பு பீதி - தலைவர்கள் கவலை


பொதுவாக தினசரி செய்தித்தாள்கள் என்றாலே களவு, கற்பழிப்பு, கொலை மற்றும் பரபரப்பு செய்திகள் என்ற பெயரில் உப்புச் சப்பில்லாத செய்திகள் (சாம்பிளுக்கு: நமீதாவுக்கு வயிற்றுவலி, இரசிகர்கள் கவலை) இவைதான் நாம் அன்றாடம் பார்ப்பது. அந்தந்த சீசனுக்கு தகுந்தாற்போல மற்ற செய்திகளும் வரும். இப்போ தேர்தல் காலம் என்பதால் தேர்தல் செய்திகளுக்கு பஞ்சமில்லை. அரசியல் காமெடிகளுக்கும் குறைவில்லை.

ஆனால் இப்போது தேர்தலில் வெற்றி தோல்வி என்பதை விட செருப்படி குறித்துதான் ஒவ்வொரு தலைவர்களும் பெரும் பயத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஜார்ஜ்புஷ் மீது செருப்பு வீசியதை (வாழ்க அந்த புண்ணியவான்) நம் மக்கள் சின்சியராக பின்பற்றத் துவங்கியதுதான் அதற்குக் காரணமாம்.

இதுவரை செருப்பு ஆயுதத்துக்கு இலக்கானவர்கள்
1. மத்திய உள்துறை அமைச்சர்- ப.சிதம்பரம்
2. காங்கிரஸ் எம்.பி- ஜின்டால்
3. பிஜேபி பிரதம வேட்பாளர் -எல்.கே.அத்வானி
இப்போ லேட்டஸ்டா நேற்று ஒருத்தர் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறார். அடுத்து யாரோ?????????
பெயரெல்லாம் கேட்கக் கூடாது. ஒழுங்கா பேப்பர் வாங்கிப் படிங்க.

இது போதாதென்று மிக வலிமையானவர் என்று பெயரெடுத்த குஜராத் முதல்வர் நரேந்திரமோடி நேற்று செருப்பு தாக்குதலுக்குப் பயந்து பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே ஒரு பாதுகப்பு வலை பின்னி வைத்து அதிற்குள் இருந்து தேர்தல் பிரசாரம் செய்தாராம். இப்போது அரசியல் தலைவர்கள் செருப்பு தாக்குதலிலிருந்து தப்பிப்பது எவ்வாறு(லேனா தமிழ்வாணன் கூட ஒரு புத்தகம் தயார் செய்து கொண்டிருப்பதாக கேள்வி) என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். ஆகவே தலைவர்களும் பிரசார பீரங்கிகளும் மிகுந்த ஜாக்கிரதையாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

அஸ்கு: என்னன்னே தேர்தலில் செருப்பு மேட்டர் இவ்வளவு முக்கியமானதா?

பிஸ்கு: இருக்காதா பின்ன. செருப்பு வீசப் பட்டா உடனே செய்திகளில் ரொம்ப போகஸ் ஆவதால் இப்போ சில ஊர்பேர் தெரியாத கட்சிகள் எல்லாம் தங்கள் மீது யாராவது செருப்பு வீச மாட்டார்களா? நாமும் பாப்புலர் ஆகமாட்டோமா என்று ஏங்குகிறார்களே!

அஸ்கு: எந்தக் கட்சிக்காவது செருப்பு தேர்தல் சின்னமாக இருக்கா?

பிஸ்கு: எனக்கு தெரியலை. ஆனால் செருப்பு கொஞ்சம் கொஞ்சமா மக்கள் சின்னமா மாறிக்கிட்டிருக்கு என்பதுதான் உண்மை.

அஸ்கு: அப்போ நாம வீசுவதற்கென்றே ஸ்பெசலா செருப்பு தயாரிப்போமாண்ணே ?

அரசியல்வாதிகளுடன் ஆரம்பப்பள்ளியில் (கலக்கல் தொடர்)


இன்றைய மாநில மற்றும் தேசிய அரசியல்வாதிகள் அனைவரும் ஒழுங்காக படித்துவிட்டுத்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிற படியால் அனைவரும் ஆரம்பக் கல்வி கற்க பள்ளிக் கூடம் வந்து அமர்ந்திருக்கின்றனர். வகுப்பு ஆரம்பிக்கிறது. ஆசிரியர் அப்துல்கலாம் உள்ளே வருகிறார். எல்லாரும் எழுந்திருந்து
வணக்கம் சொல்லி அமர்கின்றனர். ஒருவர் மட்டும் அமர்ந்து கொண்டே வந்தனம் சொல்லும் விதமாக எவரும் பார்க்கா வண்ணம் கைகளை குவித்துவிட்டு உடனே கைகளை இறகுகிறார். அது வேறு யாருமல்ல. ஜெயலலிதாதான்

அப்துல் கலாம்: இந்த வகுப்பிற்கு வந்திருக்கும் உங்களைப் பார்க்கும் போது நாளைய இந்தியாவின் ஒளிமயமான Future கனாக் காணும் தூரத்தில்தான் இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. நாம் பாடத்த ஆரம்பிப்போம். சரி அ, ஆ படிக்கலாமா? யாரிடம் கேள்வி கேட்கலாம்.

(அப்போது பன்னீர் செல்வம் திடிரென எழுந்து)
அ என்றால் அம்மா
(உடனே பின்னாலிருந்து புரட்சித்தலைவி வாழ்க என்ற கோஷம் கேட்கிறது)
ஆ என்றால் ஆப்பு
இ என்றால் இலவசம்(???!!!!!)
ஈ என்றால்.........

அப்துல் கலாம் குறுக்கிட்டு......ஏய் பன்னீர் உன்னை யார் சொல்லச் சொன்னது உட்காரு.

அப்போது தங்கபாலு எழுந்து
சார், அ என்றால் அன்னை என்பதுதானே கரெக்ட்.அதான சார் பன்னீரை உட்காரச் சொன்னீங்க
வகுப்பில் உடனே கோஷ்டி மோதல் ஏற்படுகிறது.

அப்துல் கலாம்:சரி சரி. எல்லரும் அமைதியாக இருங்க. எல்லாரும் ஒற்றுமையா இல்லன்ன நான் அடுத்த முறை ஆசிரியரா வர மாட்டேன்.

(உடனே வகுப்பில் அமைதி)

அப்துல்கலாம்: சரி. தாய்த்தமிழ் போதும். தமிழ் என்றாலே சண்டைதான் வருகிறது.

உடனே கலைஞர் எழுந்து " தமிழுக்காக நான் எத்தனை முறை உயிரைக் கொடுத்திருக்கிறேன். இன்னும் கூட நூறு முறை கொடுப்பேன். நான் வாழ்வதே வேறு யாரும் தமிழை வைத்து வாழக்கூடாது என்பதற்காகத்தான்."

(ராமதாசு உடனே எழுந்து ஏதோ சொல்ல வருகிறார். ஆனால் வகுப்பில் இருக்கும் அமளியில் எதுவும் கேட்கவில்லை)

அப்துல்கலாம்: இனிமேல் தமிழ்பாடம் கிடையாது. இந்தி பத்தி பேசினா இங்கே நிறைய பேருக்கு கோபம் வரும். அதனால் இங்கிலீஸ்ல வகுப்பை தொடருவோம்.

சரி ABCD பார்ப்போமா!

எங்கே அத்வானி கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.
அத்வானி : A for Advani
B for BJP
C for........

அப்துல்கலாம்: என்ன அத்வானி ABCD சொல்லுங்கன்னா நீங்க உங்களைப் பத்தி சொல்லிகிட்டு இருக்கீங்க.

அத்வானி: என் கிட்ட நீங்க என்ன கேட்டாலும் நான் என்னைப் பத்தி மட்டும் தான் சொல்வேன். ஏன்னா நான் தான் பிஜேபியின் பிரதம வேட்பாளர்.

அப்துல்கலாம்: என்ன அத்வானி இது? வேட்பாளர்தானே. பிரதமர் இல்லையே! இங்கப் பாருங்க மன்மோகன் எவ்வளவு அடக்கமா அன்னையருகில் அமர்ந்திருக்கிறார். சரி. நீங்க உட்காருங்க, சொன்னது போதும்.

(மறுபடியும் பயங்கர கலவரம் வெடிக்கிறது. அத்வானி பேச முடியாதென்றால் யாருக்கும் பேச அனுமதிகிடையாது என்று காவி யுனிபார்ம் போட்ட மாணவர்கள் ஸ்டிரைக் பண்ண துடிக்கிறார்கள்.)

நிலைமை விபரீதமாகப் போவதை உணர்ந்த அப்துல்கலாம் "சரி, சரி யாரும் பேச வேண்டாம். நாம் எழுத்து தேர்வு வைப்போம். அப்போதான் அமளிதுமளி இல்லாம வகுப்பு
நடக்கும். நாளைக்கு பலத்த பாதுகாப்பின் மத்தியில் எழுத்து தேர்வு நடக்கும். (ஆசிரியர் அப்துல்கலாமின் இந்த அறிவிப்பை கேட்டதும் மாணவர்கள் தங்களுக்குள் பரபரவென்று பேசி ஒருவரோடொருவர் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.)

அப்போது விபிசிங் எழுந்து நிற்கிறார்.

விபிசிங்: எங்களால தனித்தனியா எல்லாம் பரீட்சை எழுத முடியாது. இன்றைய நிலைமையில் கூட்டு சேர்ந்து எழுதினாத்தான் நாங்க ஜெயிக்க முடியும்.

மாணவர்கள் எல்லாரும் கோரஸாக ஆமா ஆமா வீ வான்ட் கூட்டு என்று கத்துகின்றனர். என்னடா இது கம்பைன்டு ஸ்டடி கேள்விப் பட்டிருக்கேன். இது என்ன கூட்டா தேர்வு எழுதுவது. என்ன சொல்வது எனத்தெரியாமல் அப்துல்கலாம் மாணவர்களையே பார்த்துக் கொண்டு நிற்கிறார். அப்போது விஜயகாந்த் எழுந்து நிற்கிறார்.

அப்துல்கலாம்: என்னப்பா விஜயகாந்த் கையை தூக்கி ஏதோ பேச வர்றீயே. ஏது? ஆ(மூ)த்திர அவசரமா. சீக்கிரம் சொல்லு, அப்புறம் செல்லு.

விஜயகாந்த்: ஐயா இங்கே வகுப்பில இவ்வளவு மாணவர்கள் இருக்கிறார்கள். ஒருத்தருக்கு கூட தனியா நிக்க தெம்பு இல்லை. ஆனா எனக்கு அந்த தெம்பு இருக்கு. ஏன்ன என்னுடைய கூட்டு இவர்களுடன் அல்ல வெளியே இருக்கும் மக்குகளுடன் தான்.

கலைஞர்: தமிழ்விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்களே, தம்பி விஜயகாந்த் விவரம் புரியாமல் பேசுகிறார். அவரது வயதைவிட எனது அனுபவம் அதிகம். நான் சொல்லுகிறேன். கூட்டாக பரீட்சையை சந்தித்தால்தான் நாங்கள் வெற்றி பெறுவோம். ஆகவே........

(எல்லாரும் கோரஸாக கூட்டு தேவை கூட்டு தேவை. வீ வான்ட் கூட்டு என்று கத்து கின்றனர். என்ன எல்லாரும் ஒன்றாக கூட்டு என்று கத்துகிறார்களே என்று தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த அப்துல்கலாம் மதிய இடைவேளைக்கான நேரம் இது
என்பதை அறிந்து)
" சரி சரி. நீங்க தனியே எழுதினாலும் சரி, கூட்டா எழுதினாலும் சரி. எனக்குத்தேவை ரிசல்ட். இப்போ மதிய இடைவேளைக்கான நேரம் ஆகவே எல்லாரும் கலைந்து செல்லலாம்"
அறிவிப்பு வந்ததுதான் தாமதம். விருந்துக்கு முன் யாருடன் கூட்டு என்பதை முடிவு செய்துவிடவேண்டும் என்ற முனைப்பில் எல்லாரும் வெளியேறி முனைப்பாக ஒருவரையொருவர் சந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.

அப்பாட ஒருவழியா வகுப்பு முடிந்தது என்று அப்துல்கலாம் திரும்பிப் பார்த்தால் ஒருவர் மட்டும் தூங்கிக் கொண்டிருக்கிறார். எனவே அருகில் சென்று அவரை தட்டி எழுப்பி வகுப்பு முடிந்துவிட்டது எழுந்திரு என்கிறார்.

கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்திருக்கும் ஜெயலலிதா, என்னை தொட்டு எழுப்புகிற அளவுக்கு தைரியமா மேன். நான் வழக்கமா இந்த டைம்தான் தூக்கத்தைவிட்டே எழுந்திருப்பேன். என்னமோ முதல் நால் வகுப்புன்னு வந்தால் எழுப்பிவிடுறீயே. இனிமே நான் வகுப்பு வர மாட்டேன். என் சப்ஸ்டிட்யூடா பன்னீர்செல்வம் வருவார்.

ஏன் தான் இந்த அம்மாவை எழுப்பினோமோ என்று பிரம்மச்சாரி அப்துல்கலாம் நொந்துகொள்கிறார். ஆவது ஆகட்டும் என்று கடவுள் மேல் நம்பிக்கையைப் போட்டு ஒளிமயமான இந்தியாவைக் குறித்து கனவு காண அப்துல் கலாம் செல்கிறார்.

இடைவேளைக்குப் பிறகு தொடரும்..........


அஸ்கு: என்னண்ணே! தலைவர்களே இந்த ரேஞ்ஜில் இருந்தா தொண்டர்கள்????? இதுல எத்தனை பெர்சன்ட் உண்மை?

பிஸ்கு: நான் சொல்வது எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மை.

அஸ்கு: ஆனா நிறைய பேர காணோமே!

பிஸ்கு: இது முத நாள் என்பதால பலர் வரலை. சிலர் அடக்கி வாசிச்சிருக்காங்க. சீக்கிரத்தில் அவர்களும் வருவார்கள்.

அஸ்கு: எப்படியோ இவர்கள் ஒழுங்கா இருந்தா சரி.

Monday, April 20, 2009

கொள்(ளை)கை தேடும் கூட்டணிகள்நாம் அரசியல் ஜோக்குகள் பல படித்திருக்கிறோம். நம்ம எந்தக் கட்சியில் இருக்கிறோம் என்பதும் எந்தக் கூட்டணியில இருக்கிறோம் என்பதும் கட்சித்தலைவர்களுக்கே மறந்துவிடும் அளவுக்கு தாவோ தாவென்று அணிதாவும் குரக்குகள்(அர்த்தமெல்லாம் கேட்கக் கூடாது) நம் அரசியல் தலைகள். முன்பெல்லாம் (காலம்???) கொள்கைக்காக உயிரையும் விடுவோம் என்று அரசியல் கட்சிகள் முழங்குவர்.

இப்படி சொல்லி சொல்லியே பலரது உயிரினைக் குடித்து பதவிக்கு வந்தபின் நான் வாழ்வதே நீங்கள் அழிந்து போய்விடக் கூடாதே என்று பேசி ஒவ்வொரு நாளும் தன் அறிக்கையில் உயிர்த்தியாகம் செய்வர். பலர் உயிரை எடுப்பார் அதற்கு துணையும் தூதும் போவார். கடைசியில் இயற்கைக் கூட்டணி, கொள்கைக் கூட்டணி என்று தம்பட்டம் அடிப்பார்.

இந்தியாவில் எந்தக் கட்சியாவது எங்கள் கொள்கை இதுதான் என்று சொல்லி அதற்காக உண்மையாகவே நின்றிருக்கிறதா என்றால் இப்போது எவரும் இல்லை. மானங்கெட்ட கம்யுனிஸ்டுகள் கூட இதில் வந்திருப்பது வேதனைக்குரிய காரியம்.

இப்போ எவம்ல கொளகைய பாக்குறான். யார் கூட சேர்ந்தா ஓட்டு கிடைக்கும்னுதான பார்க்கிறான் என்ற அண்ணாச்சியின் ஆதங்கம் தான் எனதும். இப்போதைக்கு அரசியல் கடிச்களின் பொதுவான கொள்கை ஓட்டுக்களை எப்படியாவது பெறுவதும் பெற்ற பின் பதவியிலிருந்து கொள்ளையடிப்பதும்தான். இதற்குத்தான் அரசியல் வாதிகளின் கொள்கைக் கூட்டணி.

இந்தியாவில் கொள்கையை என்று உருப்படியாக சொல்லிக் கொள்ள ஏதாவது கட்சி இருக்கிறதா. சாமானிய மனிதனின் பிரச்சனைகளை அலசாமல் அதைப் பேசாமல் இலவசங்களையும் தகாத பேச்சுக்களையும் மட்டுமே நம்பி வேட்டையில் ஈடுபட்டால்................ அப்துல்கலாமின் இந்தியாவைக் குறித்த கனவு கனவில் மட்டும்தான் சாத்தியம்.
நம்ம தலைவருங்கோ உசுப்பேத்தி உசுப்பேத்தியே காலத்தை தள்ளிட்டிருக்க........... நமக்குத்தான் ரணகளமாகிட்டிருக்கு வாழ்க்கை.

அஸ்கு: கொள்கை என்றால் என்ன?

பிஸ்கு: கொல்லைப் புறம் வழியாக சென்று பேரம் பேசி பின்பு கரம் கோர்த்த பின் பேசுவதுதான் கொள்கை

அஸ்கு: கொள்கைக் கூட்டணி என்றால்???????

பிஸ்கு: மக்களை கொள்ளையடிக்க சேரும் கூட்டணி.

அஸ்கு: அப்படின்னா நிலையான கொள்கை யாருக்குண்ண இருக்கு?

பிஸ்கு: மக்களாகிய நமக்குத்தான். ஏமாறுவதில்

இதுவரை ப்ளாக் எழுதாதவர்களுக்கு இந்தப் பதிவு

நீங்கள் இதுவரை எந்த ப்ளாக்கும் எழுதாமல் பராக் பராக் என வேடிக்கை பார்த்து செல்பவரா? எப்படி எழுதுவது என்று தெரியவில்லையா? கவலையே வேண்டாம். உங்களுக்கும் சக ப்ளாக்கிகளுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.

நீங்கள் இதுவரை ப்ளாக் எதுவும் எழுதவில்லை யெனில்
நீங்கள் செய்ய வேண்டியவை


முதலாவது தயவு செய்து அவசரப்பட்டு உடனே ப்ளாக் ஆரம்பித்துவிடாதீர்கள். ( நாங்களெல்ல்லாம் இப்போதான் கடை விரிச்சிருக்கோம் மக்கா). அதனால எங்களைப் போன்றவர்களின் வலைப் பதிவுகளை மாய்ந்து மாய்ந்து படிக்கவும். விளையாட்டுக்கு இதைச் சொல்ல வில்லை. சீரியசாக சொல்கிறேன். நிறைய படிக்கும் போதுதான் எழுதுவதற்கான கருப்பொருள்கள் புதிதாக கிடைக்கும். அல்லது (என்னைப் போன்று) கருப்பொருளை காப்பியடிக்க வசதியாக இருக்கும். மேலும் பல ஐடியாக்கள் மனதில் பளிச்சிடும்(எப்படி காப்பியடிப்பது என்று!!!).

இரண்டாவது முக்கியமானது
நீங்கள் நினைத்ததையெல்லாம் எழுதினால் நல்லதுதான். வாசிக்கிற மற்றவர்களுக்கு அது புரியவேண்டும் மேலும் சுவராசியமானதாகவும் இருக்க வேண்டும். இல்லையேல் சுப்பிரசனியமாமி அட எழுத்துப் பிழை.......:)(: சுப்பிரமணியசாமி (இவர் அறிவாளி என்பதில் சந்தேகமேயில்லை) அடிக்கடி உளறுவது போல ஆகிவிடும். குறைந்தது ஓரிருமுறையாவது யோசித்துப் பார்த்து பின்பு எழுதி அதையும் பலமுறை வாசித்துப் பார்த்து பதிவிட்டால் வாசிக்க நல்லாயிருக்கும். இல்ல காமிடியாகிடும். அப்புறம் ஜிகிடி பகிடிதான்.

முடிவானது ஆனால் முத்தாய்ப்பானது:
நல்ல கலைஞனுக்கு மிகவும் முக்கியமானது என பல மகான்கள் (என்னையும் சேர்த்துதான்ப்பா) சொல்பவை:
உங்கள் ஐம்புலன்களும் ஆறாவது அறிவும் கூட விழிப்பாக இருக்க வேண்டும். வேறுவகையில் சொல்வதானால் உங்கள் கண்களும் காதும் திறந்திருக்கட்டும். இதுக்கு மேல எல்லாம் விளக்க முடியாது. முடியலை.

இந்த தகவல் கொஞ்சமாவது பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்தையும் ஓட்டையும் நங்கென்று குத்தி செல்லுங்கள். மாறாக தலைப்பை பார்த்து ஆர்வக் கோளாறில் வந்துட்டோம். புதுசா சொல்ல ஒன்னுமில்லையென்றால் நல்லா நாலுவார்த்தை திட்டிட்டு போங்க. நான் மோதிரக் கையால் குட்டுன்னு நினைச்சுக்குறேன். அப்படியாவது புத்திவருதான்னு பார்ப்போம்.அஸ்கு: என்னண்ணே இப்படி சீரியஸாக எல்லாம் எழுதுறீங்க? என்னாச்சு. உங்க ஊரில் வெயில் எப்படி?

பிஸ்கு: அப்பப்ப பொதுச் சேவைங்கிற பேரல ஏதாவது செய்யணும் இல்லன்னா நடிக்கவாவது செய்யணும். செய்யாட்டி கப்பல் கவுந்துடும்.

அஸ்கு: இதெல்லாம் எங்கே கத்துக்குறீங்க?

பிஸ்கு: எல்லாம் நம்ம தலைவரு த்மிழினக் காவலரு அவரு கலைஞரு

அஸ்கு: மேலே சொன்னது போக வேறெதாச்சும் இருக்கா?

பிஸ்கு: சொல்ல நிறைய விசயம் இருக்கு. என்ன கேட்பதற்குத்தான் ஆள் வேண்டும். எனக்கு நீ இருக்க அதனால சொல்றேன்.

எந்த விசயத்தையும் மாறுபட்ட கண்ணோட்டத்துல அணுகினால் நாம் அந்தக் காரியத்தில் வெற்றி பெறுவது மிகச் சுலபம். இதற்கு லாட்டரல் திங்கிங்(Lateral thinking) என்று சொல்வார்கள். அதனால இன்மேல் நீ என்னிடம் கேள்வி கேட்கும் போது கொஞ்சமாவது யோசிப்பா அஸ்கு.

அஸ்கு: சரின்னே . அப்ப ஒரு கேள்வி கேட்குறேன். நீங்க இதுவரை சொன்னது எல்லாம் மெய்யாலுமே உண்மையா அல்லது..............?????????

அதிமுகவின் புதிய கொ.ப.செ வைகோ


அரசியல் ஆடுபுலி ஆட்டங்களில் என்னவேணாலும் நடக்கலாம். சொந்த இலாபத்துக்காக எவருக்காகவும் வக்காலத்து வாங்குவான் அரசியல் தமிழன். இவர்களையும் இவர்கள் சொரியும் (பண) முதலைக்கண்ணீரையும் கண்டு ஏமாற வேண்டும் என்பது த்மிழனின் தலைவிதி போலும். நெஞ்சம் பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைக்கையிலே என்று பாரதியார் புலம்பினது போல புலம்பி பின்பு குழம்பி எவனுக்காவது ஓட்டைப் போடுகிறோம்.

Vaiko proposes Jayalalitha for prime ministership (IANS)
நேற்று விடுதலைப் புலிகளின் உண்மையான் ஆதரவாளர் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் திருவாளர் வைகோ அவர்கள் வழக்கம் போல முழங்கினார். அத்துடன் அதிமுக அம்மாவை மத்தியில் அரியணை ஏற்றுவோம் என்று சூளுரைத்திருக்கிறார். முன்பெல்லாம் வைகோ பேசினால் நமக்கெல்லாம் நாடி நரம்பு புடைக்கும். இப்போது அவருக்கு மட்டும்தான் அது நடக்கிறது. நமக்கு எரிச்சல்தான் வருகிறது.

அம்மாவின் நிஜ முகம் எவரும் அறிவார். காரியம் முடிந்ததும் எவரையும் காலில் போட்டு மிதிக்கும் அதிமுக தலைவி ஒரு தனிப்பிறவி. ஆனால் கலைஞர் அப்படியல்ல. கூடவே வைத்துக் கொண்டு வளரவிடமாட்டார்,வெளியேயும் விட மாட்டார். காங்கிரஸ் என்ற ஒரு பெரும் கட்சி (இப்போதல்ல, காமராஜர் காலத்தில்) இப்போது ஷோகேஸ் கட்சியானது எப்படி. அதுதான் அரசியலில் கலைஞரின் இராஜதந்திரம். அம்ம அவர்கள் கட்சியையே காணாமல் போகச் செய்துவிடுவார். மதிமுகவிம் நிலைமை இப்போ அதுதான்.

பொறுத்து பொறுத்து பார்த்தார் வைகோ. தொகுதி ஒதுக்கீட்டிலும் அம்மா ஆப்பு வைத்துவிட்டார்கள். கட்சிக்கு ( நமக்கு நாமே திட்டத்தில் )ஏற்கனவே ஆப்பு வைத்தாயிற்று. இனிமேல் நம் எதிர்காலத்திற்கு ஆப்பு வந்துவிடக் கூடாதே என்ற கவலையில் நேற்று அம்மாவை அரியணை ஏற்ற சபதம் செய்திருக்கிறார்.

இதன் பிண்ணனி என்ன? சற்று ஆராய்வோமா?


இப்போது வைகோ பின்னால் எவருமே இல்லை என்பதுதான் பிரதான பிண்ணணியாம். நம் பின்னால்தான் எவருமே இல்லை. சரி நாமாவது எவர் பின்னாலாவது நிற்போம். அப்போதுதான் (முதுகில்) குத்த வசதியாக இருக்கும் என்று வைகோ முடிவு எடுத்துவிட்டார் போலும். சீக்கிரத்தில் மதிமுக கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் ஐக்கியமாக திட்டம் வேறு. ஏனெனில் கலைஞரிடம் போக முடியாது அல்லவா???!!!

ஆகவே அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை குறி வைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார். அதில் ஒரு இரகசியம் இருக்கு. அது எதற்கு நமக்கு. நம்ம வைகோ அண்ணாச்சிக்கு எப்போதுமே முடியாததை முதலிலேயே பேசி அதை காமெடியாக்கிவிடுவது வழக்கம். உதாரணச் சம்பவங்கள் ஏராளம். இதில் சேதுவும் உள்ளடக்கம்.

வைகோ ஒரு காலத்தில் தமிழகத்தின் தலை விதியை மாற்றக் கூடிய நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார். இப்போது அவருடைய நம்பிக்கை என்ன என்று அவருக்கே தெரியுமா? இப்போதுள்ள அரசியல் காமெடியன்களில் நவரச நாயகன்பட்டத்தை தாராளமாக வைகோவிற்கு வழங்கலாம். நம்ம ஒரிஜினல் நவரச நாயகன் அரசியல் வந்த பின் காமிடி நாயகனாக்கிவிட்டார்.

அஸ்கு: அண்ணே அது என்ன கொ.ப.செ இரகசியம்?

பிஸ்கு: ஓ அதுவா! அதிமுக அரசியல் ஜாதகப் படி யார் கொ.ப.செ ஆக இருக்காங்களோ அவர்கள் தான் அடுத்த தலைவர். (முதலில் எம்ஜியார் அடுத்து ஜெயா அம்மு இப்போ களத்தில் போட்டிக்கு வைகோ)

அஸ்கு: அட இவ்வளவு விசயம் இருக்குதா இதில். என்னமோ போங்கண்ணே உங்களவுக்கு எனக்கு அறிவு இல்ல.

பிஸ்கு: அப்போ தப்பித்தவறி அறிவாலயம் போயிடாத. உனக்கு உள்ளதும் போயிடும்.

Sunday, April 19, 2009

அரசியல் (புது) அறிமுகம்

அரசியலை சாக்கடை என்று சொல்லி படித்தவர்களும், பண்புள்ளவர்களும் ஒதுங்கிப் போனால், அதை யார்தான் சுத்தம் செய்வது?' என்று சினிமாவில் வசனம் பேசுகிற பல ஹீரோக்கள்... நிஜ வாழ்கையில் ஓட்டுப் போடுவதோடு தங்கள் ஜனநாயக் கடமையை முடித்துக் கொள்கிறார்கள். படித்தவர்களும் பண்புள்ளவர்களும்கூட இந்த சாக்கடைக்கு பயந்து ஒதுங்கிக் கொள்வதால் ரவுடிகளும், கட்டை பஞ்சாயத்து ஆசாமிகளும் இன்று அரசியலை தம் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள். 

இந்த நிலையில், 'சாக்கடையை சுத்தம் பண்ண நான் ரெடி' என காலெடுத்து வைத்திருக்கிறார் 29 வயதே ஆன சரத்பாபு. பிரியாணி, குவார்ட்டர் பாட்டில் என முகம் மாறிப் போயிருக்கும் இன்றைய அரசியலில், அறிவையும் உழைப்பையும் கேடயமாகக்கொண்டு தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் சரத்பாபு. 

நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற 'பிட்ஸ்-பிலானியில்' இன்ஜினீயரிங் பட்டமும் வாங்கியவர். ஐ.ஐ.எம்-மிலும், பிட்ஸ்-பிலானியிலும் படித்த அத்தனை பேரிடம் இல்லாத ஒரு கூடுதல் 'தகுதி' சரத்பாபுவுக்கு உண்டு. ஆம். சரத்பாபு மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர்! அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர். அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் இத்தனை பட்டங்களையும் பெற்றார் சரத்பாபு. பட்டங்கள் மட்டுமா? 

இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'யூத் ஐகான்' விருதும் பெற்றவர் சரத்பாபு. ஐ.ஐ.எம்-மில் படித்தவர்களெல்லாம் பல லட்சம் மாத சம்பளத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் செட்டில் ஆவது வழக்கமாக இருக்க... சரத்பாபு எடுத்தது மாறுபட்ட முடிவு. பொதுவாக ரிப்பன் வெட்டும் எந்த நிகழ்ச்சிக்கும் போகாத இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, சரத்பாபு முதல் முதலாக காலேஜ் ஒன்றில் கேன்டீன் துவங்கியபோது அதன் துவக்க விழாவுக்கு வந்து இவரை உற்சாகப்படுத்தினார்.

இத்தனை தகுதிகள் இருந்தாலும், இதோ சாந்தமாக தென்சென்னை தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கிறார் சரத். பிரசாரம் முடித்த ஒரு மாலைப் பொழுதில், அவருடைய ராயப்பேட்டை அலுவலகத்தில் அவரை சந்தித்தோம். 

ஒரு டிபிக்கல் அரசியல் கட்சி அலுவலகம் போல் இல்லாமல், ஒரு காலேஜ் காம்பஸ் மாதிரி இருந்தது அலுவலகம். கம்ப்யூட்டரில் வாக்காளர் பெயர் பட்டியலை பார்த்து விவாதித்தபடி, தென்சென்னை வரைபடத்தை டேபிளில் விரித்து வைத்து, நண்பர்களுடன் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அந்த வேலைகளுக்கிடையே நம்மிடம் பேசினார் சரத்பாபு.

"என்னோட சின்ன வயசில எங்க அம்மா சாப்பாடு வேணாம்டானு சொல்லிட்டு, அடிக்கடி தண்ணி குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. 'தண்ணின்னா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கு'னு சின்னப் பையன் நானும் நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது, இட்லி கடையில் கிடைக்கிற வருமானத்தை வச்சு அம்மா, நான், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பினு ஆறு பேர் எப்படி சாப்பிட முடியும்? அதான் எங்க அம்மா தண்ணீரை குடிச்சே வயித்தை நிறைச்சுட்டு இருக்காங்க.

ஆனாலும் என் வயித்துக்கும், அறிவுக்கும் பட்டினி போடாம நல்லா படிக்க வச்சாங்க. படித்து முடிச்சதும் பல லட்ச ரூபாய் சம்பளத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்புகள் வந்துச்சு. எனக்கு அதெல்லாம் பெரிசா தெரியலை. எங்க குடும்பம் பட்டிருந்த கடனை அடைக்க ஒரு கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன். பிறகு, அம்மா நடத்தி வந்த அதே இட்லி கடையை நடத்த ஆரம்பிச்சேன். தாய் எட்டடி பாய்ஞ்சா, குட்டி பதினாறு அடி பாய்ஞ்சு ஆகணுமில்லையா? அதனால கடைய கொஞ்சம் பெரிசா ஆரம்பிச்சேன். சென்னை, கோவா, பிலானி, ஹைதராபாத்னு பல ஊர்கள்ல இருக்கும் பல பல்கலைக்கழக கேன்டீன்களை இப்ப நடத்திக்கிட்டு இருக்கேன். வருஷத்துக்கு ஏழு கோடி ரூபாய் புழங்கும் இந்த பிசினஸ் மூலமா சுமார் 250 பேருக்கு வேலையும் கொடுத்திருக்கேன்.

பணம் எந்த விதத்துலயும் என்னை மாத்திடலை. முன்ன இருந்த அதே மடிப்பாக்கம் ஏரியா வீட்லதான் இப்பவும் இருக்கேன். சின்னப் புள்ளையில இருந்து பாத்துப் பழகின மாமா பொண்ணைத்தான் கட்டிக்கிட்டேன். நான் டாக்டர் கிடையாது. ஆனா, ஸ்கூலுக்கு போற ஒரு பையனை பார்த்தாலே அவன் சாப்பிட்டிருக்கானா இல்லையான்னு கண்டுபிடிச்சுடுவேன். கண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம். அவன் சாப்பிட ஏதாவது வழி செய்யணுமில்லையா..? அதனாலதான் தென்சென்னை வேட்பாளரா போட்டி போடறேன். நான் போட்டி போடறேன்னு கேள்விப்பட்டதுமே, எனக்கு அறிமுகம் இல்லாதவங்ககூட என்னோட சேர்ந்து எனக்காக வாக்கு சேகரிக்கிறாங்க. அரசியல்னாலே ஒதுங்கிப் போறவங்களை, குறிப்பா இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவந்து அதை சேவை செய்கிற தளமா மாத்தணும். அதுதான் என்னோட ஒரே திட்டம்!" என நெஞ்சை நிமிர்த்துகிறார் சரத்பாபு. 

என்ன சொல்ல..?

ஒளி படைத்த கண்ணினாய் வா... வா... வா! உறுதி கொண்ட நெஞ்சினாய் வா... வா... வா!


அஸ்கு: நான் தென்சென்னையிலிருந்தால் .............

பிஸ்கு: உங்களுக்குத்தான் அங்க ஓட்டு கிடையாதே...... நீங்கதான் 

அஸ்கு: நான் அவருக்கு ஓட்டுப் போடனும்னு ஆசை. ஒரு உண்மையான திமுக தொண்டனுக்கு ஓட்டு இல்ல்ன்னாலும் சரத்பாபுவுக்கு ஓட்டு எப்படி போடறதுன்னு தெரியும்

பிஸ்கு: நீங்க சொல்றது நேர்மையான வழியா தெரியலையே

அஸ்கு: இவ ரொம்ப நல்லவனா இருக்கான்யா. அதனாலதான்

இந்தப் பதிவு சென்னையில் உள்ள நல்ல் மற்றும் கள்ள ஓட்டு போடும் அன்பர்களின் கவனத்துக்குSaturday, April 18, 2009

என்னைப் பார்!!! எல்லாம் மறைந்துவிடும்
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தை நன்னா உத்துப் பாருங்கோ. நிற்க. நான் சொன்னது அந்தப் படத்தில் இருக்கிற
கருப்பு புள்ளியை. அதையே நீங்கள் உற்று பார்த்துக் கொண்டிருக்கும் போது நடக்கும் மேஜிக் தெரிகிறதா. அந்த கருப்பு புள்ளிகளை சுற்றிலும் உள்ள வண்ணங்கள் அப்படியே பி.சி.சர்க்கார் மாஜிக் போல மறைந்துவிடுகிறது பாருங்கல். உங்களுக்கு மறையவில்லை என்றால் உடனடியாக நீங்கள் பார்க்க வேண்டியது ஒரு நல்ல கண்மருத்துவரை.

அஸ்கு: பிஸ்கு அண்ணா இது எப்படிங்கன்ன? ஆச்சரியமா இருக்கு.

பிஸ்கு: இதை இல்லியூஷன் Illusion என்கிறார்கள். நம் கண்களே நம்மை ஏமாற்றுகிறது அவ்வளவுதா
ன்.

அஸ்கு: அண்ணா அந்த பல்வேறு வண்ணங்கள் மறைவது நம் வாழ்க்கையில் உள்ள நல்ல காரியங்களைக் குறிக்குதா???


பிஸ்கு: அட அசடே. இதுல்லாம் சும்மா விளையாட்டுக்காகத்தான். கண் சரியா தெரியாதவனுக்கு அந்த வண்ணங்கள் மறையாது தெரியுமா. அதற்கு நிறக் குருடுன்னு கூட சொல்லலாம்.


அஸ்கு: என்னமோ போங்கனா. நீங்க சொல்றது எங்க எனக்கு புரிது?


பெண்களைப் பற்றி அ(ரி)றிய சில உண்மைகள்


பெண்கள்  70% அழகானவர்கள். 


பெண்கள்  75%  இனிமையானவர்கள்


பெண்கள்  85% குறும்புத்தனமுள்ளவர்கள்

பெண்கள்  90%  மகிழ்ச்சியையே தரக் கூடியவர்கள்


பெண்கள் 100 %  அன்பானவர்கள்


சரி இவர்கள் பற்றிய கணக்கை கூட்டிப் பார்ப்போமா?

70+ 75+ 85+ 90+ 100 =???????????

விடை:!!!!!!!!!!


ஆக மொத்த கூட்டு எண்: 420

அஸ்கு: இதிலே என்னப்பா விசயம் இருக்கு?

பிஸ்கு: ஸ்..... அமைதி. விசயம் புரிந்தவர்கள் உன்னை அடிக்க வந்துவிடுவார்கள்.

அஸ்கு: எனக்கொன்னும் புரியலையே?????????

பிஸ்கு :அப்படியா! அதுவரைக்கும் எனக்கு ரொம்ப சந்தோசம். உனக்கு இ.பி.கோ தெரியுமா?? எல்லா அரசியல்வாதிகளும் இந்த லிஸ்டில் வந்துவிடுவர். Friday, April 17, 2009

அத்வானி மதம் மாறி விட்டதாக பரபரப்பு
சமீபத்திய செருப்படி நாயகன் அத்வானி மதம் மாறிவிட்டதாக மிகுந்த பரபரப்பு செய்தி (செருப்படியின் தாக்கமாக இருக்குமோ) ஒன்று வந்துள்ளது. இதற்குத்தான் செருப்படி விழுந்திருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். நான் சொல்வது வதந்தி அல்ல. உண்மையாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அத்வானிஜி மீது செருப்பு எறிந்த பாரதிய ஜனதா தலைவரின் வார்த்தைகளை கவனித்துப் பாருங்கள் உண்மை தெரியும். உங்களுக்கு இன்னமும் நான் கூறுவதில் நம்பிக்கை வரவில்லையா. அப்படியெனில் அத்வானி தனது வலைப்பூவில் எழுதியதை வாசித்துப் பாருங்கள். 

சத்தியமா இது என்னுடைய கற்பனை அல்ல. அத்வானி வலைப்பூவில் எழுதினது

How to be in God’s service by St. Francis of Assisi

• It is in giving that we receive.

• If you have men who will exclude any of God’s creatures from the shelter of compassion and pity, you will have men who will deal likewise with their fellow men.

• It is in pardoning that we are pardoned.

• It is no use walking anywhere to preach unless our walking is our preaching.

• It is not fitting, when one is in God’s service, to have a gloomy face or a chilling look.

• Lord, grant that I might not so much seek to be loved as to love.

• Lord, make me an instrument of thy peace. Where there is hatred, let me sow love. Where there is injury let me sow pardon.

• Start by doing what’s necessary; then do what’s possible; and suddenly you are doing the impossible.

• While you are proclaiming peace with your lips, be careful to have it even more fully in your heart.

• I have been all things unholy. If God can work through me, he can work through anyone.

* * *

St. Francis of Assisi (1182-1226) is one of the most beloved and respected Christian saints. Known for his piety, simplicity and humility, his words of wisdom have an everlasting sheen. His love for birds, animals, trees and all the creations of God is legendary. One day, while St. Francis was traveling with some companions, they happened upon a place in the road where birds filled the trees on either side. He told his companions to “wait for me while I go to preach to my sisters the birds”. The birds surrounded him, drawn by the power of his voice, and not one of them flew away. The saint spoke to them:

“My sister birds, you owe much to God, and you must always and in everyplace give praise to Him; for He has given you freedom to wing through the sky and He has clothed you… you neither sow nor reap, and God feeds you and gives you rivers and fountains for your thirst, and mountains and valleys for shelter, and tall trees for your nests. And although you neither know how to spin or weave, God dresses you and your children, for the Creator loves you greatly and He blesses you abundantly. Therefore… always seek to praise God.”

Source: http://blog.lkadvani.in/wisdom-soup-for-the-poll/how-to-be-in-god’s-service-by-st-francis-of-assisi

மேற்கண்ட செய்தி அத்வானிஜியின் வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்டது ஆகும். உண்மை நிலவரம் தெரியாமல் பிஜேபியினரே விழிபிதுங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. சீக்கிரத்தில் இயேசுவின் மலைப்போதனையை மதப் போதனையாக வழங்குவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது தேர்தல் ஜுரமா அல்லது மன உரமா என்று பொறுத்திருந்துதான் பார்கக் வேண்டும். ஏற்கனவே அத்வானியின் பேத்தி ஒரு பிரபலமான கிறிஸ்தவ பாடகி என்பதை எத்தனை பேர் அறிவர். 

Asku:அத்வானி தேர்தல் முடிந்த பிறகு என்ன மதம் மாறுவார்

Bisku: என்ன நம்ம மதம் தான்.

Asku: நம்ம மதம் எது?

Bisku: சம்மதம் (எதுக்குனுலாம் கேட்கக் கூடாது) Monday, April 13, 2009

ஓட்டணா, காலணா, எட்டணா...இப்போது?


  நான் சிறுவனாக இருந்தபோது எங்க பாட்டிதாத்தா வீட்டில் உள்ள ஏராளமான ஓட்டை அணாக்கள் மற்றும் காலணா, ஒரு பைசா, இரண்டு பைசா நாணயங்களை வைத்து விளையாடியது நினைவில் இருக்கிறது. அப்போது அவற்றிற்கு வழங்கப்பட்ட பெயர் செல்லாக் காசுகள். அப்போது ஐந்து பைசா, பத்து பைசா, இருபது பைசா ஆகியவைதான் புழக்கத்திலிருந்தன. இப்போது அவை செல்லாக்காசுகளாகி குழந்தைகள் விளையாட பயன்படுத்துவது ஒரு சோகமான விடயம். அதென்ன சோகம்னா நான் சிறுவனாக இருந்த போது எத்தனை பைசா கிடைத்தாலும் ஐந்து பைசா மிட்டாயை தாண்டி வாங்கியது கிடையாது. பை நிறைய ஐந்து பைசா மிட்டாய்கள்தான்.

இப்போது பிச்சைக்காரன் கூட ஒரு ரூபாய் நாணயத்தை ஏற இறங்க பார்த்த பின் தான் வாங்குகிறான். இல்லையேல் இதை வாங்குகிற அளவுக்கு நான் பிச்சைக்காரன் அல்ல என்று சொல்லாமல் சொல்லி திருப்பிக் கொடுத்துவிடுகிறான். நாலணா, எட்டணா (புரியாதவர்களுக்காக - 25பைசா, 50 பைசா) நாணயங்கள் சீக்கிரத்தில் குழந்தைகள் கைகளிடம் செல்லாக்காசுகளாக செல்லப் போகிறது அல்லது சென்று விட்டது. 

இப்போது பெரும்பாலும் புழக்கத்தில் இருப்பது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்கள் தான். இவற்றிற்கு துணையாக இருக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி இப்போது பத்து ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதிலும் க்ராஸ் உண்டு. அதை யாராவது across செய்வார்களா தெரியவில்லை.

உலகப் பொருளாதார வீழ்ச்சியினால் பலருடைய பாக்கெட்டுகளில் பணம் இல்லாமல் பில்கள்தான் எடையைக் கூட்டிக் காண்பிக்கின்றன என்பதால் ரிசர்வ் வங்கி குடிமகனுக்காகப் பாவப்பட்டு போனால் போகட்டும் இந்த பத்து ரூபாய் நாணயத்தை வைத்து வெயிட் காட்டுங்க என்று வெளியிட்டிருக்கிறதோ என்று சாமானியக் குடிமகன் சாந்தப்பட்டுக் கொள்கிறான்.  

Asku: ரொம்ப முன்னாடியே 10ரூபாய், 100 ரூபாய் நாணயம் விட்டுட்டாங்களாமே! இதிலென்ன புதுசு. தினுசாத்தான் இருக்கு. நாணயம் மேட்டர் நல்லாருக்குதோ இல்லியோ நம்ம அரசியல்வாதிகளின் நா நயம் இப்போ ரொம்ப ஓவர்.
Bisku: நாணயம் மேட்டர் நல்லாருக்குதோ இல்லியோ நம்ம அரசியல்வாதிகளின் நா நயம் இப்போ ரொம்ப ஓவர். தமிழா! நீ ஐயோ பாவம்