
அப்படியும் இப்படியுமாக ஒரு வழியாக ஐ.பி.எல்.கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் வைத்து நடத்தினால் பாதுகாப்பு பிரச்சனை என்று கூறி யாரும் அதை வைத்து அரசியல் பண்ண முடியாதபடி ப.சி செய்துவிட்டாலும் இரசிகர்களின் கிரிக்கெட் பசியை தீர்க்க கங்கணம் கட்டிக் கொண்டு கிரிக்கெட்டு வாரியம் அதை நடாத்திவருவது நாமறிந்ததே. இப்போது இந்தியாவில் நடைபெறும் அரசியல் பலப்பரீட்சையில் கிரிக்கெட் போட்டிகளை விட மக்கள் தேர்தல் கூத்துக்களைத்தான் அதிகம் பார்ப்பதாக தனியார் கருத்துக கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இதனால் கிரிக்கெட் போட்டிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க ஓவர்களை இருபதிலிருந்து ஐந்து அல்லது பத்து ஓவர்களுக்க் கூட குறைக்கலாம் ஐபிஎல்.
நினைத்தது நடந்துகொண்டிருப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு சந்தோசம், பாஜகவிற்கு வயிற்றெரிச்சல், ஐபிஎல்லுக்கு கவலை. இவை நமக்கு ஒரு சிறிய கொசுறு செய்தி. அவ்வளவே!
அஸ்கு: கிரிக்கெட்டை விட தேர்தலை மக்கள் விரும்புவது நல்ல விசயம் தானே?
பிஸ்கு: ஆமா, ஆமா நல்லதுதான். ஏன்னா கிரிக்கெட் கோமாளித்தனத்தை எப்பவேணா பாத்துக்கலாம், ஆனால் தேரதல் காமெடியை ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதானே பாக்க முடியும்.
அஸ்கு: கிரிக்கெட்டில் வீனாப் போகுது நம்ம நேரம், தேர்தலில்........?????
பிஸ்கு: சதேகமேயில்லை. வாக்குறுதிகளும், அதை நம்பும் நம்மைப் போன்றவர்களின் வாழ்க்கையும்தான்
அஸ்கு: அப்போ எதுக்கு தேர்தல் நடக்கணும்??????
பிஸ்கு: ஆங். நல்லக் கேள்வி? ஆனா பதில்தான் சொல்ல முடியாது. ஏனெனில் இது ஜனநாயக நாடு

2 comments:
// ஆங். நல்லக் கேள்வி? ஆனா பதில்தான் சொல்ல முடியாது. ஏனெனில் இது ஜனநாயக நாடு //
சரியாகச் சொன்னீர்கள்..
IPL nadantha enna nadakkatta enna anna? who cares?
Post a Comment