நான் சிறுவனாக இருந்தபோது எங்க பாட்டிதாத்தா வீட்டில் உள்ள ஏராளமான ஓட்டை அணாக்கள் மற்றும் காலணா, ஒரு பைசா, இரண்டு பைசா நாணயங்களை வைத்து விளையாடியது நினைவில் இருக்கிறது. அப்போது அவற்றிற்கு வழங்கப்பட்ட பெயர் செல்லாக் காசுகள். அப்போது ஐந்து பைசா, பத்து பைசா, இருபது பைசா ஆகியவைதான் புழக்கத்திலிருந்தன. இப்போது அவை செல்லாக்காசுகளாகி குழந்தைகள் விளையாட பயன்படுத்துவது ஒரு சோகமான விடயம். அதென்ன சோகம்னா நான் சிறுவனாக இருந்த போது எத்தனை பைசா கிடைத்தாலும் ஐந்து பைசா மிட்டாயை தாண்டி வாங்கியது கிடையாது. பை நிறைய ஐந்து பைசா மிட்டாய்கள்தான்.
இப்போது பிச்சைக்காரன் கூட ஒரு ரூபாய் நாணயத்தை ஏற இறங்க பார்த்த பின் தான் வாங்குகிறான். இல்லையேல் இதை வாங்குகிற அளவுக்கு நான் பிச்சைக்காரன் அல்ல என்று சொல்லாமல் சொல்லி திருப்பிக் கொடுத்துவிடுகிறான். நாலணா, எட்டணா (புரியாதவர்களுக்காக - 25பைசா, 50 பைசா) நாணயங்கள் சீக்கிரத்தில் குழந்தைகள் கைகளிடம் செல்லாக்காசுகளாக செல்லப் போகிறது அல்லது சென்று விட்டது.
இப்போது பெரும்பாலும் புழக்கத்தில் இருப்பது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்கள் தான். இவற்றிற்கு துணையாக இருக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி இப்போது பத்து ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதிலும் க்ராஸ் உண்டு. அதை யாராவது across செய்வார்களா தெரியவில்லை.
உலகப் பொருளாதார வீழ்ச்சியினால் பலருடைய பாக்கெட்டுகளில் பணம் இல்லாமல் பில்கள்தான் எடையைக் கூட்டிக் காண்பிக்கின்றன என்பதால் ரிசர்வ் வங்கி குடிமகனுக்காகப் பாவப்பட்டு போனால் போகட்டும் இந்த பத்து ரூபாய் நாணயத்தை வைத்து வெயிட் காட்டுங்க என்று வெளியிட்டிருக்கிறதோ என்று சாமானியக் குடிமகன் சாந்தப்பட்டுக் கொள்கிறான்.
Asku: ரொம்ப முன்னாடியே 10ரூபாய், 100 ரூபாய் நாணயம் விட்டுட்டாங்களாமே! இதிலென்ன புதுசு. தினுசாத்தான் இருக்கு. நாணயம் மேட்டர் நல்லாருக்குதோ இல்லியோ நம்ம அரசியல்வாதிகளின் நா நயம் இப்போ ரொம்ப ஓவர்.
Bisku: நாணயம் மேட்டர் நல்லாருக்குதோ இல்லியோ நம்ம அரசியல்வாதிகளின் நா நயம் இப்போ ரொம்ப ஓவர். தமிழா! நீ ஐயோ பாவம்
1 comment:
Nalla irukku askubisku anna kalakkitteenga. keep it up :)
Post a Comment