Tuesday, May 5, 2009

எழுதுகிறவர்களுக்கும், எழுதபோகிறவர்களுக்கும்:


குளு குளு தலைப்பு காட்டி கடுப்பேத்தும் நம்ம தமிழ் வலைப்பூ மன்னர்களும் உருப்படியாக பலரும் விரும்பும்படி எழுத நினைப்பவர்களும் வாசிக்க வேண்டிய ஒரு கட்டுரை இது.


உங்களில் எத்தனை பேருக்கு ஜார்ஜ் அவுசௌனியன் என்பவரைக் குறித்து தெரியும். இவரைக் குறித்து சொல்லிக் கொள்ள பெரிசாக எதுவுமில்லை. ஆனால் http://maddox.xmission.com/ என்ற வலைப்பூ உங்களுக்கு தெரியுமா. உலகின் நம்பர் ஒன் வலைப்பூ இதுவாகத்தான் இருக்கும். இதை ஆரம்பித்த ஜார்ஜ் கல்லூரிப்படிப்பையே சரியாக முடிக்காதவர். ஆனால் 18வயதிலேயே(1997) ப்ளாக் எழுத ஆரம்பித்துவிட்டார். இவர் ஆரம்பித்த தளத்தின் பெயர்: http://thebestpageintheuniverse.com இவர் உண்மையிலேயே வித்தியாசமாக சிந்திக்க (லாட்டரல் திங்கிங்) தெரிந்தவர்.இணையதளத்தில் இவரின் சாதனைகள் சொல்லிமாளாது.

இவரின் ஒவ்வொரு பதிவுகளும் குறைந்தது பத்து லட்சம் தடவை பார்க்கப்படுகிறது. 50 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்ட பதிவுகளும் உண்டு. இவரின் வலைப்பூவில் ஒவ்வொரு பதிவின் கீழும் அதை வாசித்தவர்களின் எண்ணிக்கை வித்தியாசமான விதத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதை இங்கே எழுதுவதை விட நீங்களே அவரின் பக்கத்திற்கு சென்று வாசித்தால்தான் நன்றாக ரசிக்க முடியும்.
இவர் ஓசியில் எழுத இடம் கிடைக்கிறது என்று புகுந்து விளையாடுவதில்லை. என்றாலும் எழுதுபவை பெரும்பாலும் கிண்டலானவையாகவும் இவரே வரைந்த வித்தியாசமான படங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. இவரிடமிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நாமெல்லாம் பதிவுகளின் எண்ணிக்கையும் வருபவர்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் அதிகமானதுமே இதைவைத்து எப்படி விளம்பர வருமானம் பண்ணுவது என்று யோசிக்கிறோம். அதிலும் சிலர் பதிவுகள் எழுதுவதற்கு முன்பே விளம்பர பேனர்களை வைத்துவிடுகின்றனர். ஆனால் மேற்படி மனிதரின் ஒவ்வொரு பதிவுகளும் பல இலட்சம் முறை வாசிக்கப்படுவது நிச்சயம் என்றாலும் அவரின் வலைப்பூ விளம்பரமின்றியே காட்சியளிக்கிறது. இப்படியே நான் எழுதிக் கொண்டு போனால் இப்பதிவு ஜார்ஜின் புகழ் பாடும் பதிவாகிவிடும். எனது நோக்கம் அதுவல்ல.

நம் தமிழ் ப்ளாக் எழுதுபவர்கள் பலருக்கும் தினமலர் நாளிதழின் மனப்பான்மைதான் தலைப்பு எழுதுவதில் இருக்கிறது. தலைப்பு பரபரப்பாக இருக்கிறதே என்று உள்ளே வந்து பார்த்தால் ஏமாற்றம்தான். அதன்பின் அந்த பக்கம் தலைவச்சுகூட படுக்கக் கூடாது என்று விண்டோவை மூடுவதுதான் எனக்கு அடிக்கடி நடக்கிறது. சுண்டி இழுக்கும் தலைப்புகள் தேவைதான். ஆனால் உள்ளே சரக்கு இருந்தால் தான் அடுத்தமுறை உள்ளே வருகை இருக்கும். இல்லையேல் தங்க முட்டையிடும் வாத்தைக் கொன்ற கதை மாதிரிதான்.
இரண்டாவதாக வலைப்பூ என்பது நம் சொந்தக் கதை சோகக் கதைகளை பரிமாறிக் கொள்ள மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். நாம் எழுதும் மேட்டர் என்னவாக இருந்தாலும் அதை மொக்கை போடாமல் எழுதுவது அவசியம்.

நம்மாளுகளைத்தான் அட்வைஸ் சொல்லச் சொன்னா சொல்லிக்கிட்டே இருப்போமில்லா. கேக்குறவுக கதிய நினைச்சு இத்தோட முடிச்சிக்கிறேன். அப்புறம் இதுலயே எல்லாத்தையும் சொல்லிப் புட்டா.... அடுத்த பதிவுக்கு என்ன செய்வது.....ஆங்..

அஸ்கு: அண்ணே! நீங்க இன்னும் கொஞ்சம் கூட எழுதிஇருக்கலாம்.

பிஸ்கு: உண்மைதான். ஆனா எப்போதுமே எதையுமே நாம் ஒரே தடவையில திணிக்கக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் சில தனித்தன்மைகள் இருக்கும். அது மிளிர சில அடிப்படைகள் தெரிந்தாலே போது.

அஸ்கு: நீங்க ஆ......ஊன்னா உடனே லாட்டரல் திங்கிங் அப்படி இப்படின்னு சொல்லுவீங்க. நமக்கு சிந்தித்தா பல்ப் எரிய மாட்டேங்குதே!

பிஸ்கு: எல்லாவிசயமும் உடனே வந்துருமா என்ன. நாம் சிந்திக்க வாசிக்கணும். வாசிக்க வாசிக்க.... எல்லாம் அத்துப் படி ஆகிவிடும். வாசிக்கும் போது சிந்துவதை பொறுக்கினாலே பல பதிவுகள் விடலாம். என்னிடம் கைவசம் ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகள் உள்ளன.

அஸ்கு: அப்புறம் என்ன! எழுதிவிட வேண்டியதுதானே?

பிஸ்கு: இப்போதைக்கு தலைப்புகள் மட்டும்தான் உள்ளன. உள்ளே என்ன எழுத வேண்டும் எனபதற்காக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

இத்தலைப்பு தொடர்பாக உள்ள மற்றுமொரு பதிவு:

இதுவரை ப்ளாக் எழுதாதவர்களுக்கு இந்தப் பதிவு5 comments:

டக்ளஸ்....... said...

Thanx For yr INTRO...

வெத்து வேட்டு said...

நாம நெட் கபே நிழல்ல ஒதுங்குறதுக்கு முன்னாலேயே பதிவு எழுத ஆர்ம்பிச்சுட்டாரு போல இருக்கே

ரங்கன் said...

:)

கிரி said...

//நம் தமிழ் ப்ளாக் எழுதுபவர்கள் பலருக்கும் தினமலர் நாளிதழின் மனப்பான்மைதான் தலைப்பு எழுதுவதில் இருக்கிறது//

:-))))))))

//உள்ளே சரக்கு இருந்தால் தான் அடுத்தமுறை உள்ளே வருகை இருக்கும்//

உண்மை..ஒரு சிலர் இதையே தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள்..தற்போது அவர்களை சூடான இடுகைகளில் பார்க்க முடிவதில்லை..உஷாராகிட்டாங்க போல இருக்கு படிக்கிறவங்க :-)

//நாம் எழுதும் மேட்டர் என்னவாக இருந்தாலும் அதை மொக்கை போடாமல் எழுதுவது அவசியம்.//

மொக்கையை ரசிப்பவர்களும் உள்ளனரே.. அதில் ஒன்றும் தவறு இருப்பதாக தோன்றவில்லை..

johnindia said...

Very good post anna :) Romba thaevayaana aalosanai ithu.

Post a Comment