Monday, April 20, 2009
கொள்(ளை)கை தேடும் கூட்டணிகள்
நாம் அரசியல் ஜோக்குகள் பல படித்திருக்கிறோம். நம்ம எந்தக் கட்சியில் இருக்கிறோம் என்பதும் எந்தக் கூட்டணியில இருக்கிறோம் என்பதும் கட்சித்தலைவர்களுக்கே மறந்துவிடும் அளவுக்கு தாவோ தாவென்று அணிதாவும் குரக்குகள்(அர்த்தமெல்லாம் கேட்கக் கூடாது) நம் அரசியல் தலைகள். முன்பெல்லாம் (காலம்???) கொள்கைக்காக உயிரையும் விடுவோம் என்று அரசியல் கட்சிகள் முழங்குவர்.
இப்படி சொல்லி சொல்லியே பலரது உயிரினைக் குடித்து பதவிக்கு வந்தபின் நான் வாழ்வதே நீங்கள் அழிந்து போய்விடக் கூடாதே என்று பேசி ஒவ்வொரு நாளும் தன் அறிக்கையில் உயிர்த்தியாகம் செய்வர். பலர் உயிரை எடுப்பார் அதற்கு துணையும் தூதும் போவார். கடைசியில் இயற்கைக் கூட்டணி, கொள்கைக் கூட்டணி என்று தம்பட்டம் அடிப்பார்.
இந்தியாவில் எந்தக் கட்சியாவது எங்கள் கொள்கை இதுதான் என்று சொல்லி அதற்காக உண்மையாகவே நின்றிருக்கிறதா என்றால் இப்போது எவரும் இல்லை. மானங்கெட்ட கம்யுனிஸ்டுகள் கூட இதில் வந்திருப்பது வேதனைக்குரிய காரியம்.
இப்போ எவம்ல கொளகைய பாக்குறான். யார் கூட சேர்ந்தா ஓட்டு கிடைக்கும்னுதான பார்க்கிறான் என்ற அண்ணாச்சியின் ஆதங்கம் தான் எனதும். இப்போதைக்கு அரசியல் கடிச்களின் பொதுவான கொள்கை ஓட்டுக்களை எப்படியாவது பெறுவதும் பெற்ற பின் பதவியிலிருந்து கொள்ளையடிப்பதும்தான். இதற்குத்தான் அரசியல் வாதிகளின் கொள்கைக் கூட்டணி.
இந்தியாவில் கொள்கையை என்று உருப்படியாக சொல்லிக் கொள்ள ஏதாவது கட்சி இருக்கிறதா. சாமானிய மனிதனின் பிரச்சனைகளை அலசாமல் அதைப் பேசாமல் இலவசங்களையும் தகாத பேச்சுக்களையும் மட்டுமே நம்பி வேட்டையில் ஈடுபட்டால்................ அப்துல்கலாமின் இந்தியாவைக் குறித்த கனவு கனவில் மட்டும்தான் சாத்தியம்.
நம்ம தலைவருங்கோ உசுப்பேத்தி உசுப்பேத்தியே காலத்தை தள்ளிட்டிருக்க........... நமக்குத்தான் ரணகளமாகிட்டிருக்கு வாழ்க்கை.
அஸ்கு: கொள்கை என்றால் என்ன?
பிஸ்கு: கொல்லைப் புறம் வழியாக சென்று பேரம் பேசி பின்பு கரம் கோர்த்த பின் பேசுவதுதான் கொள்கை
அஸ்கு: கொள்கைக் கூட்டணி என்றால்???????
பிஸ்கு: மக்களை கொள்ளையடிக்க சேரும் கூட்டணி.
அஸ்கு: அப்படின்னா நிலையான கொள்கை யாருக்குண்ண இருக்கு?
பிஸ்கு: மக்களாகிய நமக்குத்தான். ஏமாறுவதில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment