Tuesday, April 21, 2009

அரசியல்வாதிகளுடன் ஆரம்பப்பள்ளியில் (கலக்கல் தொடர்)


இன்றைய மாநில மற்றும் தேசிய அரசியல்வாதிகள் அனைவரும் ஒழுங்காக படித்துவிட்டுத்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிற படியால் அனைவரும் ஆரம்பக் கல்வி கற்க பள்ளிக் கூடம் வந்து அமர்ந்திருக்கின்றனர். வகுப்பு ஆரம்பிக்கிறது. ஆசிரியர் அப்துல்கலாம் உள்ளே வருகிறார். எல்லாரும் எழுந்திருந்து
வணக்கம் சொல்லி அமர்கின்றனர். ஒருவர் மட்டும் அமர்ந்து கொண்டே வந்தனம் சொல்லும் விதமாக எவரும் பார்க்கா வண்ணம் கைகளை குவித்துவிட்டு உடனே கைகளை இறகுகிறார். அது வேறு யாருமல்ல. ஜெயலலிதாதான்

அப்துல் கலாம்: இந்த வகுப்பிற்கு வந்திருக்கும் உங்களைப் பார்க்கும் போது நாளைய இந்தியாவின் ஒளிமயமான Future கனாக் காணும் தூரத்தில்தான் இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. நாம் பாடத்த ஆரம்பிப்போம். சரி அ, ஆ படிக்கலாமா? யாரிடம் கேள்வி கேட்கலாம்.

(அப்போது பன்னீர் செல்வம் திடிரென எழுந்து)
அ என்றால் அம்மா
(உடனே பின்னாலிருந்து புரட்சித்தலைவி வாழ்க என்ற கோஷம் கேட்கிறது)
ஆ என்றால் ஆப்பு
இ என்றால் இலவசம்(???!!!!!)
ஈ என்றால்.........

அப்துல் கலாம் குறுக்கிட்டு......ஏய் பன்னீர் உன்னை யார் சொல்லச் சொன்னது உட்காரு.

அப்போது தங்கபாலு எழுந்து
சார், அ என்றால் அன்னை என்பதுதானே கரெக்ட்.அதான சார் பன்னீரை உட்காரச் சொன்னீங்க
வகுப்பில் உடனே கோஷ்டி மோதல் ஏற்படுகிறது.

அப்துல் கலாம்:சரி சரி. எல்லரும் அமைதியாக இருங்க. எல்லாரும் ஒற்றுமையா இல்லன்ன நான் அடுத்த முறை ஆசிரியரா வர மாட்டேன்.

(உடனே வகுப்பில் அமைதி)

அப்துல்கலாம்: சரி. தாய்த்தமிழ் போதும். தமிழ் என்றாலே சண்டைதான் வருகிறது.

உடனே கலைஞர் எழுந்து " தமிழுக்காக நான் எத்தனை முறை உயிரைக் கொடுத்திருக்கிறேன். இன்னும் கூட நூறு முறை கொடுப்பேன். நான் வாழ்வதே வேறு யாரும் தமிழை வைத்து வாழக்கூடாது என்பதற்காகத்தான்."

(ராமதாசு உடனே எழுந்து ஏதோ சொல்ல வருகிறார். ஆனால் வகுப்பில் இருக்கும் அமளியில் எதுவும் கேட்கவில்லை)

அப்துல்கலாம்: இனிமேல் தமிழ்பாடம் கிடையாது. இந்தி பத்தி பேசினா இங்கே நிறைய பேருக்கு கோபம் வரும். அதனால் இங்கிலீஸ்ல வகுப்பை தொடருவோம்.

சரி ABCD பார்ப்போமா!

எங்கே அத்வானி கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.
அத்வானி : A for Advani
B for BJP
C for........

அப்துல்கலாம்: என்ன அத்வானி ABCD சொல்லுங்கன்னா நீங்க உங்களைப் பத்தி சொல்லிகிட்டு இருக்கீங்க.

அத்வானி: என் கிட்ட நீங்க என்ன கேட்டாலும் நான் என்னைப் பத்தி மட்டும் தான் சொல்வேன். ஏன்னா நான் தான் பிஜேபியின் பிரதம வேட்பாளர்.

அப்துல்கலாம்: என்ன அத்வானி இது? வேட்பாளர்தானே. பிரதமர் இல்லையே! இங்கப் பாருங்க மன்மோகன் எவ்வளவு அடக்கமா அன்னையருகில் அமர்ந்திருக்கிறார். சரி. நீங்க உட்காருங்க, சொன்னது போதும்.

(மறுபடியும் பயங்கர கலவரம் வெடிக்கிறது. அத்வானி பேச முடியாதென்றால் யாருக்கும் பேச அனுமதிகிடையாது என்று காவி யுனிபார்ம் போட்ட மாணவர்கள் ஸ்டிரைக் பண்ண துடிக்கிறார்கள்.)

நிலைமை விபரீதமாகப் போவதை உணர்ந்த அப்துல்கலாம் "சரி, சரி யாரும் பேச வேண்டாம். நாம் எழுத்து தேர்வு வைப்போம். அப்போதான் அமளிதுமளி இல்லாம வகுப்பு
நடக்கும். நாளைக்கு பலத்த பாதுகாப்பின் மத்தியில் எழுத்து தேர்வு நடக்கும். (ஆசிரியர் அப்துல்கலாமின் இந்த அறிவிப்பை கேட்டதும் மாணவர்கள் தங்களுக்குள் பரபரவென்று பேசி ஒருவரோடொருவர் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.)

அப்போது விபிசிங் எழுந்து நிற்கிறார்.

விபிசிங்: எங்களால தனித்தனியா எல்லாம் பரீட்சை எழுத முடியாது. இன்றைய நிலைமையில் கூட்டு சேர்ந்து எழுதினாத்தான் நாங்க ஜெயிக்க முடியும்.

மாணவர்கள் எல்லாரும் கோரஸாக ஆமா ஆமா வீ வான்ட் கூட்டு என்று கத்துகின்றனர். என்னடா இது கம்பைன்டு ஸ்டடி கேள்விப் பட்டிருக்கேன். இது என்ன கூட்டா தேர்வு எழுதுவது. என்ன சொல்வது எனத்தெரியாமல் அப்துல்கலாம் மாணவர்களையே பார்த்துக் கொண்டு நிற்கிறார். அப்போது விஜயகாந்த் எழுந்து நிற்கிறார்.

அப்துல்கலாம்: என்னப்பா விஜயகாந்த் கையை தூக்கி ஏதோ பேச வர்றீயே. ஏது? ஆ(மூ)த்திர அவசரமா. சீக்கிரம் சொல்லு, அப்புறம் செல்லு.

விஜயகாந்த்: ஐயா இங்கே வகுப்பில இவ்வளவு மாணவர்கள் இருக்கிறார்கள். ஒருத்தருக்கு கூட தனியா நிக்க தெம்பு இல்லை. ஆனா எனக்கு அந்த தெம்பு இருக்கு. ஏன்ன என்னுடைய கூட்டு இவர்களுடன் அல்ல வெளியே இருக்கும் மக்குகளுடன் தான்.

கலைஞர்: தமிழ்விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்களே, தம்பி விஜயகாந்த் விவரம் புரியாமல் பேசுகிறார். அவரது வயதைவிட எனது அனுபவம் அதிகம். நான் சொல்லுகிறேன். கூட்டாக பரீட்சையை சந்தித்தால்தான் நாங்கள் வெற்றி பெறுவோம். ஆகவே........

(எல்லாரும் கோரஸாக கூட்டு தேவை கூட்டு தேவை. வீ வான்ட் கூட்டு என்று கத்து கின்றனர். என்ன எல்லாரும் ஒன்றாக கூட்டு என்று கத்துகிறார்களே என்று தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த அப்துல்கலாம் மதிய இடைவேளைக்கான நேரம் இது
என்பதை அறிந்து)
" சரி சரி. நீங்க தனியே எழுதினாலும் சரி, கூட்டா எழுதினாலும் சரி. எனக்குத்தேவை ரிசல்ட். இப்போ மதிய இடைவேளைக்கான நேரம் ஆகவே எல்லாரும் கலைந்து செல்லலாம்"
அறிவிப்பு வந்ததுதான் தாமதம். விருந்துக்கு முன் யாருடன் கூட்டு என்பதை முடிவு செய்துவிடவேண்டும் என்ற முனைப்பில் எல்லாரும் வெளியேறி முனைப்பாக ஒருவரையொருவர் சந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.

அப்பாட ஒருவழியா வகுப்பு முடிந்தது என்று அப்துல்கலாம் திரும்பிப் பார்த்தால் ஒருவர் மட்டும் தூங்கிக் கொண்டிருக்கிறார். எனவே அருகில் சென்று அவரை தட்டி எழுப்பி வகுப்பு முடிந்துவிட்டது எழுந்திரு என்கிறார்.

கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்திருக்கும் ஜெயலலிதா, என்னை தொட்டு எழுப்புகிற அளவுக்கு தைரியமா மேன். நான் வழக்கமா இந்த டைம்தான் தூக்கத்தைவிட்டே எழுந்திருப்பேன். என்னமோ முதல் நால் வகுப்புன்னு வந்தால் எழுப்பிவிடுறீயே. இனிமே நான் வகுப்பு வர மாட்டேன். என் சப்ஸ்டிட்யூடா பன்னீர்செல்வம் வருவார்.

ஏன் தான் இந்த அம்மாவை எழுப்பினோமோ என்று பிரம்மச்சாரி அப்துல்கலாம் நொந்துகொள்கிறார். ஆவது ஆகட்டும் என்று கடவுள் மேல் நம்பிக்கையைப் போட்டு ஒளிமயமான இந்தியாவைக் குறித்து கனவு காண அப்துல் கலாம் செல்கிறார்.

இடைவேளைக்குப் பிறகு தொடரும்..........


அஸ்கு: என்னண்ணே! தலைவர்களே இந்த ரேஞ்ஜில் இருந்தா தொண்டர்கள்????? இதுல எத்தனை பெர்சன்ட் உண்மை?

பிஸ்கு: நான் சொல்வது எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மை.

அஸ்கு: ஆனா நிறைய பேர காணோமே!

பிஸ்கு: இது முத நாள் என்பதால பலர் வரலை. சிலர் அடக்கி வாசிச்சிருக்காங்க. சீக்கிரத்தில் அவர்களும் வருவார்கள்.

அஸ்கு: எப்படியோ இவர்கள் ஒழுங்கா இருந்தா சரி.

1 comment:

johnindia said...

//உடனே கலைஞர் எழுந்து " தமிழுக்காக நான் எத்தனை முறை உயிரைக் கொடுத்திருக்கிறேன். இன்னும் கூட நூறு முறை கொடுப்பேன். நான் வாழ்வதே வேறு யாரும் தமிழை வைத்து வாழக்கூடாது என்பதற்காகத்தான்."//

great anna... romba nice-a solli katti irukkeenga

Post a Comment