Showing posts with label அஸ்குபிஸ்கு. Show all posts
Showing posts with label அஸ்குபிஸ்கு. Show all posts

Tuesday, April 21, 2009

அரசியல்வாதிகளுடன் ஆரம்பப்பள்ளியில் (கலக்கல் தொடர்)


இன்றைய மாநில மற்றும் தேசிய அரசியல்வாதிகள் அனைவரும் ஒழுங்காக படித்துவிட்டுத்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிற படியால் அனைவரும் ஆரம்பக் கல்வி கற்க பள்ளிக் கூடம் வந்து அமர்ந்திருக்கின்றனர். வகுப்பு ஆரம்பிக்கிறது. ஆசிரியர் அப்துல்கலாம் உள்ளே வருகிறார். எல்லாரும் எழுந்திருந்து
வணக்கம் சொல்லி அமர்கின்றனர். ஒருவர் மட்டும் அமர்ந்து கொண்டே வந்தனம் சொல்லும் விதமாக எவரும் பார்க்கா வண்ணம் கைகளை குவித்துவிட்டு உடனே கைகளை இறகுகிறார். அது வேறு யாருமல்ல. ஜெயலலிதாதான்

அப்துல் கலாம்: இந்த வகுப்பிற்கு வந்திருக்கும் உங்களைப் பார்க்கும் போது நாளைய இந்தியாவின் ஒளிமயமான Future கனாக் காணும் தூரத்தில்தான் இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. நாம் பாடத்த ஆரம்பிப்போம். சரி அ, ஆ படிக்கலாமா? யாரிடம் கேள்வி கேட்கலாம்.

(அப்போது பன்னீர் செல்வம் திடிரென எழுந்து)
அ என்றால் அம்மா
(உடனே பின்னாலிருந்து புரட்சித்தலைவி வாழ்க என்ற கோஷம் கேட்கிறது)
ஆ என்றால் ஆப்பு
இ என்றால் இலவசம்(???!!!!!)
ஈ என்றால்.........

அப்துல் கலாம் குறுக்கிட்டு......ஏய் பன்னீர் உன்னை யார் சொல்லச் சொன்னது உட்காரு.

அப்போது தங்கபாலு எழுந்து
சார், அ என்றால் அன்னை என்பதுதானே கரெக்ட்.அதான சார் பன்னீரை உட்காரச் சொன்னீங்க
வகுப்பில் உடனே கோஷ்டி மோதல் ஏற்படுகிறது.

அப்துல் கலாம்:சரி சரி. எல்லரும் அமைதியாக இருங்க. எல்லாரும் ஒற்றுமையா இல்லன்ன நான் அடுத்த முறை ஆசிரியரா வர மாட்டேன்.

(உடனே வகுப்பில் அமைதி)

அப்துல்கலாம்: சரி. தாய்த்தமிழ் போதும். தமிழ் என்றாலே சண்டைதான் வருகிறது.

உடனே கலைஞர் எழுந்து " தமிழுக்காக நான் எத்தனை முறை உயிரைக் கொடுத்திருக்கிறேன். இன்னும் கூட நூறு முறை கொடுப்பேன். நான் வாழ்வதே வேறு யாரும் தமிழை வைத்து வாழக்கூடாது என்பதற்காகத்தான்."

(ராமதாசு உடனே எழுந்து ஏதோ சொல்ல வருகிறார். ஆனால் வகுப்பில் இருக்கும் அமளியில் எதுவும் கேட்கவில்லை)

அப்துல்கலாம்: இனிமேல் தமிழ்பாடம் கிடையாது. இந்தி பத்தி பேசினா இங்கே நிறைய பேருக்கு கோபம் வரும். அதனால் இங்கிலீஸ்ல வகுப்பை தொடருவோம்.

சரி ABCD பார்ப்போமா!

எங்கே அத்வானி கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.
அத்வானி : A for Advani
B for BJP
C for........

அப்துல்கலாம்: என்ன அத்வானி ABCD சொல்லுங்கன்னா நீங்க உங்களைப் பத்தி சொல்லிகிட்டு இருக்கீங்க.

அத்வானி: என் கிட்ட நீங்க என்ன கேட்டாலும் நான் என்னைப் பத்தி மட்டும் தான் சொல்வேன். ஏன்னா நான் தான் பிஜேபியின் பிரதம வேட்பாளர்.

அப்துல்கலாம்: என்ன அத்வானி இது? வேட்பாளர்தானே. பிரதமர் இல்லையே! இங்கப் பாருங்க மன்மோகன் எவ்வளவு அடக்கமா அன்னையருகில் அமர்ந்திருக்கிறார். சரி. நீங்க உட்காருங்க, சொன்னது போதும்.

(மறுபடியும் பயங்கர கலவரம் வெடிக்கிறது. அத்வானி பேச முடியாதென்றால் யாருக்கும் பேச அனுமதிகிடையாது என்று காவி யுனிபார்ம் போட்ட மாணவர்கள் ஸ்டிரைக் பண்ண துடிக்கிறார்கள்.)

நிலைமை விபரீதமாகப் போவதை உணர்ந்த அப்துல்கலாம் "சரி, சரி யாரும் பேச வேண்டாம். நாம் எழுத்து தேர்வு வைப்போம். அப்போதான் அமளிதுமளி இல்லாம வகுப்பு
நடக்கும். நாளைக்கு பலத்த பாதுகாப்பின் மத்தியில் எழுத்து தேர்வு நடக்கும். (ஆசிரியர் அப்துல்கலாமின் இந்த அறிவிப்பை கேட்டதும் மாணவர்கள் தங்களுக்குள் பரபரவென்று பேசி ஒருவரோடொருவர் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.)

அப்போது விபிசிங் எழுந்து நிற்கிறார்.

விபிசிங்: எங்களால தனித்தனியா எல்லாம் பரீட்சை எழுத முடியாது. இன்றைய நிலைமையில் கூட்டு சேர்ந்து எழுதினாத்தான் நாங்க ஜெயிக்க முடியும்.

மாணவர்கள் எல்லாரும் கோரஸாக ஆமா ஆமா வீ வான்ட் கூட்டு என்று கத்துகின்றனர். என்னடா இது கம்பைன்டு ஸ்டடி கேள்விப் பட்டிருக்கேன். இது என்ன கூட்டா தேர்வு எழுதுவது. என்ன சொல்வது எனத்தெரியாமல் அப்துல்கலாம் மாணவர்களையே பார்த்துக் கொண்டு நிற்கிறார். அப்போது விஜயகாந்த் எழுந்து நிற்கிறார்.

அப்துல்கலாம்: என்னப்பா விஜயகாந்த் கையை தூக்கி ஏதோ பேச வர்றீயே. ஏது? ஆ(மூ)த்திர அவசரமா. சீக்கிரம் சொல்லு, அப்புறம் செல்லு.

விஜயகாந்த்: ஐயா இங்கே வகுப்பில இவ்வளவு மாணவர்கள் இருக்கிறார்கள். ஒருத்தருக்கு கூட தனியா நிக்க தெம்பு இல்லை. ஆனா எனக்கு அந்த தெம்பு இருக்கு. ஏன்ன என்னுடைய கூட்டு இவர்களுடன் அல்ல வெளியே இருக்கும் மக்குகளுடன் தான்.

கலைஞர்: தமிழ்விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்களே, தம்பி விஜயகாந்த் விவரம் புரியாமல் பேசுகிறார். அவரது வயதைவிட எனது அனுபவம் அதிகம். நான் சொல்லுகிறேன். கூட்டாக பரீட்சையை சந்தித்தால்தான் நாங்கள் வெற்றி பெறுவோம். ஆகவே........

(எல்லாரும் கோரஸாக கூட்டு தேவை கூட்டு தேவை. வீ வான்ட் கூட்டு என்று கத்து கின்றனர். என்ன எல்லாரும் ஒன்றாக கூட்டு என்று கத்துகிறார்களே என்று தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த அப்துல்கலாம் மதிய இடைவேளைக்கான நேரம் இது
என்பதை அறிந்து)
" சரி சரி. நீங்க தனியே எழுதினாலும் சரி, கூட்டா எழுதினாலும் சரி. எனக்குத்தேவை ரிசல்ட். இப்போ மதிய இடைவேளைக்கான நேரம் ஆகவே எல்லாரும் கலைந்து செல்லலாம்"
அறிவிப்பு வந்ததுதான் தாமதம். விருந்துக்கு முன் யாருடன் கூட்டு என்பதை முடிவு செய்துவிடவேண்டும் என்ற முனைப்பில் எல்லாரும் வெளியேறி முனைப்பாக ஒருவரையொருவர் சந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.

அப்பாட ஒருவழியா வகுப்பு முடிந்தது என்று அப்துல்கலாம் திரும்பிப் பார்த்தால் ஒருவர் மட்டும் தூங்கிக் கொண்டிருக்கிறார். எனவே அருகில் சென்று அவரை தட்டி எழுப்பி வகுப்பு முடிந்துவிட்டது எழுந்திரு என்கிறார்.

கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்திருக்கும் ஜெயலலிதா, என்னை தொட்டு எழுப்புகிற அளவுக்கு தைரியமா மேன். நான் வழக்கமா இந்த டைம்தான் தூக்கத்தைவிட்டே எழுந்திருப்பேன். என்னமோ முதல் நால் வகுப்புன்னு வந்தால் எழுப்பிவிடுறீயே. இனிமே நான் வகுப்பு வர மாட்டேன். என் சப்ஸ்டிட்யூடா பன்னீர்செல்வம் வருவார்.

ஏன் தான் இந்த அம்மாவை எழுப்பினோமோ என்று பிரம்மச்சாரி அப்துல்கலாம் நொந்துகொள்கிறார். ஆவது ஆகட்டும் என்று கடவுள் மேல் நம்பிக்கையைப் போட்டு ஒளிமயமான இந்தியாவைக் குறித்து கனவு காண அப்துல் கலாம் செல்கிறார்.

இடைவேளைக்குப் பிறகு தொடரும்..........


அஸ்கு: என்னண்ணே! தலைவர்களே இந்த ரேஞ்ஜில் இருந்தா தொண்டர்கள்????? இதுல எத்தனை பெர்சன்ட் உண்மை?

பிஸ்கு: நான் சொல்வது எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மை.

அஸ்கு: ஆனா நிறைய பேர காணோமே!

பிஸ்கு: இது முத நாள் என்பதால பலர் வரலை. சிலர் அடக்கி வாசிச்சிருக்காங்க. சீக்கிரத்தில் அவர்களும் வருவார்கள்.

அஸ்கு: எப்படியோ இவர்கள் ஒழுங்கா இருந்தா சரி.

Monday, April 20, 2009

கொள்(ளை)கை தேடும் கூட்டணிகள்



நாம் அரசியல் ஜோக்குகள் பல படித்திருக்கிறோம். நம்ம எந்தக் கட்சியில் இருக்கிறோம் என்பதும் எந்தக் கூட்டணியில இருக்கிறோம் என்பதும் கட்சித்தலைவர்களுக்கே மறந்துவிடும் அளவுக்கு தாவோ தாவென்று அணிதாவும் குரக்குகள்(அர்த்தமெல்லாம் கேட்கக் கூடாது) நம் அரசியல் தலைகள். முன்பெல்லாம் (காலம்???) கொள்கைக்காக உயிரையும் விடுவோம் என்று அரசியல் கட்சிகள் முழங்குவர்.

இப்படி சொல்லி சொல்லியே பலரது உயிரினைக் குடித்து பதவிக்கு வந்தபின் நான் வாழ்வதே நீங்கள் அழிந்து போய்விடக் கூடாதே என்று பேசி ஒவ்வொரு நாளும் தன் அறிக்கையில் உயிர்த்தியாகம் செய்வர். பலர் உயிரை எடுப்பார் அதற்கு துணையும் தூதும் போவார். கடைசியில் இயற்கைக் கூட்டணி, கொள்கைக் கூட்டணி என்று தம்பட்டம் அடிப்பார்.

இந்தியாவில் எந்தக் கட்சியாவது எங்கள் கொள்கை இதுதான் என்று சொல்லி அதற்காக உண்மையாகவே நின்றிருக்கிறதா என்றால் இப்போது எவரும் இல்லை. மானங்கெட்ட கம்யுனிஸ்டுகள் கூட இதில் வந்திருப்பது வேதனைக்குரிய காரியம்.

இப்போ எவம்ல கொளகைய பாக்குறான். யார் கூட சேர்ந்தா ஓட்டு கிடைக்கும்னுதான பார்க்கிறான் என்ற அண்ணாச்சியின் ஆதங்கம் தான் எனதும். இப்போதைக்கு அரசியல் கடிச்களின் பொதுவான கொள்கை ஓட்டுக்களை எப்படியாவது பெறுவதும் பெற்ற பின் பதவியிலிருந்து கொள்ளையடிப்பதும்தான். இதற்குத்தான் அரசியல் வாதிகளின் கொள்கைக் கூட்டணி.

இந்தியாவில் கொள்கையை என்று உருப்படியாக சொல்லிக் கொள்ள ஏதாவது கட்சி இருக்கிறதா. சாமானிய மனிதனின் பிரச்சனைகளை அலசாமல் அதைப் பேசாமல் இலவசங்களையும் தகாத பேச்சுக்களையும் மட்டுமே நம்பி வேட்டையில் ஈடுபட்டால்................ அப்துல்கலாமின் இந்தியாவைக் குறித்த கனவு கனவில் மட்டும்தான் சாத்தியம்.
நம்ம தலைவருங்கோ உசுப்பேத்தி உசுப்பேத்தியே காலத்தை தள்ளிட்டிருக்க........... நமக்குத்தான் ரணகளமாகிட்டிருக்கு வாழ்க்கை.

அஸ்கு: கொள்கை என்றால் என்ன?

பிஸ்கு: கொல்லைப் புறம் வழியாக சென்று பேரம் பேசி பின்பு கரம் கோர்த்த பின் பேசுவதுதான் கொள்கை

அஸ்கு: கொள்கைக் கூட்டணி என்றால்???????

பிஸ்கு: மக்களை கொள்ளையடிக்க சேரும் கூட்டணி.

அஸ்கு: அப்படின்னா நிலையான கொள்கை யாருக்குண்ண இருக்கு?

பிஸ்கு: மக்களாகிய நமக்குத்தான். ஏமாறுவதில்

இதுவரை ப்ளாக் எழுதாதவர்களுக்கு இந்தப் பதிவு

நீங்கள் இதுவரை எந்த ப்ளாக்கும் எழுதாமல் பராக் பராக் என வேடிக்கை பார்த்து செல்பவரா? எப்படி எழுதுவது என்று தெரியவில்லையா? கவலையே வேண்டாம். உங்களுக்கும் சக ப்ளாக்கிகளுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.

நீங்கள் இதுவரை ப்ளாக் எதுவும் எழுதவில்லை யெனில்
நீங்கள் செய்ய வேண்டியவை


முதலாவது தயவு செய்து அவசரப்பட்டு உடனே ப்ளாக் ஆரம்பித்துவிடாதீர்கள். ( நாங்களெல்ல்லாம் இப்போதான் கடை விரிச்சிருக்கோம் மக்கா). அதனால எங்களைப் போன்றவர்களின் வலைப் பதிவுகளை மாய்ந்து மாய்ந்து படிக்கவும். விளையாட்டுக்கு இதைச் சொல்ல வில்லை. சீரியசாக சொல்கிறேன். நிறைய படிக்கும் போதுதான் எழுதுவதற்கான கருப்பொருள்கள் புதிதாக கிடைக்கும். அல்லது (என்னைப் போன்று) கருப்பொருளை காப்பியடிக்க வசதியாக இருக்கும். மேலும் பல ஐடியாக்கள் மனதில் பளிச்சிடும்(எப்படி காப்பியடிப்பது என்று!!!).

இரண்டாவது முக்கியமானது
நீங்கள் நினைத்ததையெல்லாம் எழுதினால் நல்லதுதான். வாசிக்கிற மற்றவர்களுக்கு அது புரியவேண்டும் மேலும் சுவராசியமானதாகவும் இருக்க வேண்டும். இல்லையேல் சுப்பிரசனியமாமி அட எழுத்துப் பிழை.......:)(: சுப்பிரமணியசாமி (இவர் அறிவாளி என்பதில் சந்தேகமேயில்லை) அடிக்கடி உளறுவது போல ஆகிவிடும். குறைந்தது ஓரிருமுறையாவது யோசித்துப் பார்த்து பின்பு எழுதி அதையும் பலமுறை வாசித்துப் பார்த்து பதிவிட்டால் வாசிக்க நல்லாயிருக்கும். இல்ல காமிடியாகிடும். அப்புறம் ஜிகிடி பகிடிதான்.

முடிவானது ஆனால் முத்தாய்ப்பானது:
நல்ல கலைஞனுக்கு மிகவும் முக்கியமானது என பல மகான்கள் (என்னையும் சேர்த்துதான்ப்பா) சொல்பவை:
உங்கள் ஐம்புலன்களும் ஆறாவது அறிவும் கூட விழிப்பாக இருக்க வேண்டும். வேறுவகையில் சொல்வதானால் உங்கள் கண்களும் காதும் திறந்திருக்கட்டும். இதுக்கு மேல எல்லாம் விளக்க முடியாது. முடியலை.

இந்த தகவல் கொஞ்சமாவது பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்தையும் ஓட்டையும் நங்கென்று குத்தி செல்லுங்கள். மாறாக தலைப்பை பார்த்து ஆர்வக் கோளாறில் வந்துட்டோம். புதுசா சொல்ல ஒன்னுமில்லையென்றால் நல்லா நாலுவார்த்தை திட்டிட்டு போங்க. நான் மோதிரக் கையால் குட்டுன்னு நினைச்சுக்குறேன். அப்படியாவது புத்திவருதான்னு பார்ப்போம்.



அஸ்கு: என்னண்ணே இப்படி சீரியஸாக எல்லாம் எழுதுறீங்க? என்னாச்சு. உங்க ஊரில் வெயில் எப்படி?

பிஸ்கு: அப்பப்ப பொதுச் சேவைங்கிற பேரல ஏதாவது செய்யணும் இல்லன்னா நடிக்கவாவது செய்யணும். செய்யாட்டி கப்பல் கவுந்துடும்.

அஸ்கு: இதெல்லாம் எங்கே கத்துக்குறீங்க?

பிஸ்கு: எல்லாம் நம்ம தலைவரு த்மிழினக் காவலரு அவரு கலைஞரு

அஸ்கு: மேலே சொன்னது போக வேறெதாச்சும் இருக்கா?

பிஸ்கு: சொல்ல நிறைய விசயம் இருக்கு. என்ன கேட்பதற்குத்தான் ஆள் வேண்டும். எனக்கு நீ இருக்க அதனால சொல்றேன்.

எந்த விசயத்தையும் மாறுபட்ட கண்ணோட்டத்துல அணுகினால் நாம் அந்தக் காரியத்தில் வெற்றி பெறுவது மிகச் சுலபம். இதற்கு லாட்டரல் திங்கிங்(Lateral thinking) என்று சொல்வார்கள். அதனால இன்மேல் நீ என்னிடம் கேள்வி கேட்கும் போது கொஞ்சமாவது யோசிப்பா அஸ்கு.

அஸ்கு: சரின்னே . அப்ப ஒரு கேள்வி கேட்குறேன். நீங்க இதுவரை சொன்னது எல்லாம் மெய்யாலுமே உண்மையா அல்லது..............?????????

அதிமுகவின் புதிய கொ.ப.செ வைகோ


அரசியல் ஆடுபுலி ஆட்டங்களில் என்னவேணாலும் நடக்கலாம். சொந்த இலாபத்துக்காக எவருக்காகவும் வக்காலத்து வாங்குவான் அரசியல் தமிழன். இவர்களையும் இவர்கள் சொரியும் (பண) முதலைக்கண்ணீரையும் கண்டு ஏமாற வேண்டும் என்பது த்மிழனின் தலைவிதி போலும். நெஞ்சம் பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைக்கையிலே என்று பாரதியார் புலம்பினது போல புலம்பி பின்பு குழம்பி எவனுக்காவது ஓட்டைப் போடுகிறோம்.

Vaiko proposes Jayalalitha for prime ministership (IANS)
நேற்று விடுதலைப் புலிகளின் உண்மையான் ஆதரவாளர் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் திருவாளர் வைகோ அவர்கள் வழக்கம் போல முழங்கினார். அத்துடன் அதிமுக அம்மாவை மத்தியில் அரியணை ஏற்றுவோம் என்று சூளுரைத்திருக்கிறார். முன்பெல்லாம் வைகோ பேசினால் நமக்கெல்லாம் நாடி நரம்பு புடைக்கும். இப்போது அவருக்கு மட்டும்தான் அது நடக்கிறது. நமக்கு எரிச்சல்தான் வருகிறது.

அம்மாவின் நிஜ முகம் எவரும் அறிவார். காரியம் முடிந்ததும் எவரையும் காலில் போட்டு மிதிக்கும் அதிமுக தலைவி ஒரு தனிப்பிறவி. ஆனால் கலைஞர் அப்படியல்ல. கூடவே வைத்துக் கொண்டு வளரவிடமாட்டார்,வெளியேயும் விட மாட்டார். காங்கிரஸ் என்ற ஒரு பெரும் கட்சி (இப்போதல்ல, காமராஜர் காலத்தில்) இப்போது ஷோகேஸ் கட்சியானது எப்படி. அதுதான் அரசியலில் கலைஞரின் இராஜதந்திரம். அம்ம அவர்கள் கட்சியையே காணாமல் போகச் செய்துவிடுவார். மதிமுகவிம் நிலைமை இப்போ அதுதான்.

பொறுத்து பொறுத்து பார்த்தார் வைகோ. தொகுதி ஒதுக்கீட்டிலும் அம்மா ஆப்பு வைத்துவிட்டார்கள். கட்சிக்கு ( நமக்கு நாமே திட்டத்தில் )ஏற்கனவே ஆப்பு வைத்தாயிற்று. இனிமேல் நம் எதிர்காலத்திற்கு ஆப்பு வந்துவிடக் கூடாதே என்ற கவலையில் நேற்று அம்மாவை அரியணை ஏற்ற சபதம் செய்திருக்கிறார்.

இதன் பிண்ணனி என்ன? சற்று ஆராய்வோமா?


இப்போது வைகோ பின்னால் எவருமே இல்லை என்பதுதான் பிரதான பிண்ணணியாம். நம் பின்னால்தான் எவருமே இல்லை. சரி நாமாவது எவர் பின்னாலாவது நிற்போம். அப்போதுதான் (முதுகில்) குத்த வசதியாக இருக்கும் என்று வைகோ முடிவு எடுத்துவிட்டார் போலும். சீக்கிரத்தில் மதிமுக கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் ஐக்கியமாக திட்டம் வேறு. ஏனெனில் கலைஞரிடம் போக முடியாது அல்லவா???!!!

ஆகவே அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை குறி வைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார். அதில் ஒரு இரகசியம் இருக்கு. அது எதற்கு நமக்கு. நம்ம வைகோ அண்ணாச்சிக்கு எப்போதுமே முடியாததை முதலிலேயே பேசி அதை காமெடியாக்கிவிடுவது வழக்கம். உதாரணச் சம்பவங்கள் ஏராளம். இதில் சேதுவும் உள்ளடக்கம்.

வைகோ ஒரு காலத்தில் தமிழகத்தின் தலை விதியை மாற்றக் கூடிய நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார். இப்போது அவருடைய நம்பிக்கை என்ன என்று அவருக்கே தெரியுமா? இப்போதுள்ள அரசியல் காமெடியன்களில் நவரச நாயகன்பட்டத்தை தாராளமாக வைகோவிற்கு வழங்கலாம். நம்ம ஒரிஜினல் நவரச நாயகன் அரசியல் வந்த பின் காமிடி நாயகனாக்கிவிட்டார்.

அஸ்கு: அண்ணே அது என்ன கொ.ப.செ இரகசியம்?

பிஸ்கு: ஓ அதுவா! அதிமுக அரசியல் ஜாதகப் படி யார் கொ.ப.செ ஆக இருக்காங்களோ அவர்கள் தான் அடுத்த தலைவர். (முதலில் எம்ஜியார் அடுத்து ஜெயா அம்மு இப்போ களத்தில் போட்டிக்கு வைகோ)

அஸ்கு: அட இவ்வளவு விசயம் இருக்குதா இதில். என்னமோ போங்கண்ணே உங்களவுக்கு எனக்கு அறிவு இல்ல.

பிஸ்கு: அப்போ தப்பித்தவறி அறிவாலயம் போயிடாத. உனக்கு உள்ளதும் போயிடும்.

Saturday, April 18, 2009

என்னைப் பார்!!! எல்லாம் மறைந்துவிடும்




மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தை நன்னா உத்துப் பாருங்கோ. நிற்க. நான் சொன்னது அந்தப் படத்தில் இருக்கிற
கருப்பு புள்ளியை. அதையே நீங்கள் உற்று பார்த்துக் கொண்டிருக்கும் போது நடக்கும் மேஜிக் தெரிகிறதா. அந்த கருப்பு புள்ளிகளை சுற்றிலும் உள்ள வண்ணங்கள் அப்படியே பி.சி.சர்க்கார் மாஜிக் போல மறைந்துவிடுகிறது பாருங்கல். உங்களுக்கு மறையவில்லை என்றால் உடனடியாக நீங்கள் பார்க்க வேண்டியது ஒரு நல்ல கண்மருத்துவரை.

அஸ்கு: பிஸ்கு அண்ணா இது எப்படிங்கன்ன? ஆச்சரியமா இருக்கு.

பிஸ்கு: இதை இல்லியூஷன் Illusion என்கிறார்கள். நம் கண்களே நம்மை ஏமாற்றுகிறது அவ்வளவுதா
ன்.

அஸ்கு: அண்ணா அந்த பல்வேறு வண்ணங்கள் மறைவது நம் வாழ்க்கையில் உள்ள நல்ல காரியங்களைக் குறிக்குதா???


பிஸ்கு: அட அசடே. இதுல்லாம் சும்மா விளையாட்டுக்காகத்தான். கண் சரியா தெரியாதவனுக்கு அந்த வண்ணங்கள் மறையாது தெரியுமா. அதற்கு நிறக் குருடுன்னு கூட சொல்லலாம்.


அஸ்கு: என்னமோ போங்கனா. நீங்க சொல்றது எங்க எனக்கு புரிது?


பெண்களைப் பற்றி அ(ரி)றிய சில உண்மைகள்



பெண்கள்  70% அழகானவர்கள். 


பெண்கள்  75%  இனிமையானவர்கள்


பெண்கள்  85% குறும்புத்தனமுள்ளவர்கள்


பெண்கள்  90%  மகிழ்ச்சியையே தரக் கூடியவர்கள்


பெண்கள் 100 %  அன்பானவர்கள்


சரி இவர்கள் பற்றிய கணக்கை கூட்டிப் பார்ப்போமா?

70+ 75+ 85+ 90+ 100 =???????????

விடை:!!!!!!!!!!


ஆக மொத்த கூட்டு எண்: 420

அஸ்கு: இதிலே என்னப்பா விசயம் இருக்கு?

பிஸ்கு: ஸ்..... அமைதி. விசயம் புரிந்தவர்கள் உன்னை அடிக்க வந்துவிடுவார்கள்.

அஸ்கு: எனக்கொன்னும் புரியலையே?????????

பிஸ்கு :அப்படியா! அதுவரைக்கும் எனக்கு ரொம்ப சந்தோசம். உனக்கு இ.பி.கோ தெரியுமா?? எல்லா அரசியல்வாதிகளும் இந்த லிஸ்டில் வந்துவிடுவர்.