Thursday, April 23, 2009

இந்தியாவைப் பற்றி பெருமையாய் பீத்திக் (பேசிக்) கொள்ள சில விசயங்கள்


உலக வரலாற்றில் இந்திய நாடு இதுவரைக்கும் எந்த நாடு மீதும் படையெடுத்ததில்லை.
(ஏனெனில் உட்சண்டைகளை கவனிக்கவே நேரம் போதவில்லை இன்றளவும்)

செஸ் விளையாட்டு இந்தியாவில்தான் கண்டு பிடிக்கப்பட்டது.
( நல்லவேளை!!! செஸ்க்கு நடுவில் 'க்' வைத்திருந்தால்.........?????????)

உலகத்திலேயே தபால் நிலையங்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம்.
( நோ கமெண்ட்ஸ்.)

பிரிட்டிஷ் காரர்கள் இந்தியா வருவதற்கு முன்னால் உலகிலேயே பணக்கார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்தது.
(அன்று வெள்ளைக்காரன் கொள்ளையடித்தான்,
இன்று கோடீஸ்வரன் கொள்ளையடிக்கிறான். வித்தியாசம் இதுதான்)

கி.பி.1886 வரைக்கும் வைரம் இந்தியாவில் மட்டும்தான் வெட்டி எடுக்கப்பட்டது. முழு உலகமும் இந்திய வைரம்தான்.

(இன்னைக்கு முழு உலகிலும் வைரம் கிடைக்குது, ஆனா இந்தியாவிலதான் இல்லை)

யூதர்களும் கிறிஸ்தவர்களும் கி.மு200 மற்றும் கி.பி52 ஆண்டுகளில் இருந்தே இந்தியாவில் வசித்துவருகின்றனர்.
(இன்றளவும் மைனாரிட்டியாகவே)

பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில்தான் உலகத்திலேயே மிகப்பெரிய புண்ணியஸ்தலம். இது மெக்கா மற்றும் ரோம் நகரைவிட பெரிது. ஏழுமலையானின் தினசரி சராசரி வருமானம்.......(சொல்ல மாட்டேன் கோடிகளின் எண்ணிக்கையை) உலகத்துலேயே ரொம்ப வருமானம் பாக்கும் சாமி இவருதான்[இவரை வச்சு யாரு வருமானம் பண்ணுறாவலோ?]) தினசர் வருபவர்கள் குறைந்தது 30000பேர். (ஐயா, அதவானி இதுபோல கோயில்கள் மடங்களில் சேரும் பணங்களை உருப்படியா செலவழிக்க ஏதேணும் திட்டம் யோசிக்கக் கூடாதா)

உலகத்துலேயே அதிக எண்ணிக்கையில் அரசியல் கட்சிகள் இருப்பதும் இந்தியாவில்தான். ( இந்தப் பெருமையை காப்பாற்ற ஒவ்வொருவரும் கட்சி துவங்கவேண்டும். ஆனா கொள்கையைப் ப்ததி மட்டும் பேசக் கூடாது)

உலகவரலாற்றிலேயே முதன் முறையாக என்ற சொற்றோடரை அதிகம் பயன்படுத்தும் டிவிசேனல்கள் இந்தியாவிலதான் அதிகம்.( இதை விட பெரிய வார்த்தை வேறு ஏதாவது இருந்தா சொல்லுங்க)

அஸ்கு: அண்ணே ஒரு பெரிய நாடான இந்தியாவின் பெருமைகள் இவ்வளவுதானா?

பிஸ்கு: இல்லையில்லை. சொல்லிக் கொண்டே போகலாம். ஆனா எனக்கு பெருமைகளை விட மக்களின் வறுமையும் அறியாமையும்தான் ரொம்ப முக்கியமானதாக படுகிறது.
உலகதுல முதல்முறையா குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வந்தது இந்தியாதான். இன்றளவும் அது முழுவெற்றியடையவில்லை. ப்ல நல்ல திட்டங்கள் வந்தாலும் அறியாமையினால் அவை வெறும் அறிவிப்புகளாக நின்றுவிடுகின்றன. பல திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்றடைவதில்லை. நிர்வகச் செலவுக்கே நூற்றூக்கு 90 சதவீதம் செலவு ஆகிவிடுகிறது. கம்யுனிஸ்ட்களும் கூட இதுவரைக்கும் உருப்படியா எதையும் சாதிக்கலை. (உதாரணம்- மேற்குவங்கம், கேரளா). மெலும்.......

அஸ்கு: அண்ணே போதும்..போதும்... நிறுத்துங்க..........அழுதுருவேன்.

பிஸ்கு: இந்தியாவின் உண்மையான நிலை நினைத்தால் கண்ணீர்தான்

9 comments:

Senthil said...

GOOD POST

நிகழ்காலத்தில்... said...

சுவிஷ் பேங்க் மேட்டர விட்டுவிட்டீங்களேஏஏஏஏஏ!!!!

வாழ்த்துக்கள்...

Anonymous said...

pavam neengalum minaritty enna pannuveenga unganala mela vara mudiyathu.......

அஸ்குபிஸ்கு said...

Thank u senthil

சுவிஸ் பேங்க் மேட்டர அதவானி இந்த தேர்தல் முடிந்த பின் அடுத்த தேர்தலில்தான் (அவர் உயிருடன் இருந்தால்) கையில் எடுப்பார் என நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன. அதனாலத்தான் விட்டுட்டோம். பின்னூட்டதிற்கு நன்றி அறிவே தெய்வம் .

Anonymous said...

What about our world ranking in corruption, AIDS, illiteracy, etc etc

Anonymous said...

Chozha people had conquered Indonesia and malaysia in olden days...

அருண்மொழி said...

//உலக வரலாற்றில் இந்திய நாடு இதுவரைக்கும் எந்த நாடு மீதும் படையெடுத்ததில்லை.//

பொய்.
தென்னிந்திய மன்னர்கள் கடாரம் வரை வென்றிருக்கிறார்கள்

வட இந்தியர்கள் தான் தோற்றவர்கள்

//பிரிட்டிஷ் காரர்கள் இந்தியா வருவதற்கு முன்னால் உலகிலேயே பணக்கார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்தது.//
ஒரு சிலர் மட்டுமே பணக்காரர்களாக இருந்தார்கள்

//கி.பி.1886 வரைக்கும் வைரம் இந்தியாவில் மட்டும்தான் வெட்டி எடுக்கப்பட்டது. முழு உலகமும் இந்திய வைரம்தான். (இன்னைக்கு முழு உலகிலும் வைரம் கிடைக்குது, ஆனா இந்தியாவிலதான் இல்லை)//
தென் ஆப்ரிக்கா

அருண்மொழி said...

//பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில்தான் உலகத்திலேயே மிகப்பெரிய புண்ணியஸ்தலம். இது மெக்கா மற்றும் ரோம் நகரைவிட பெரிது. ஏழுமலையானின் தினசரி சராசரி வருமானம்.......(சொல்ல மாட்டேன் கோடிகளின் எண்ணிக்கையை) உலகத்துலேயே ரொம்ப வருமானம் பாக்கும் சாமி இவருதான்[இவரை வச்சு யாரு வருமானம் பண்ணுறாவலோ?]) தினசர் வருபவர்கள் குறைந்தது 30000பேர். (ஐயா, அதவானி இதுபோல கோயில்கள் மடங்களில் சேரும் பணங்களை உருப்படியா செலவழிக்க ஏதேணும் திட்டம் யோசிக்கக் கூடாதா)//

தமிழ்ர்களுக்கு சொந்தமான இந்த கோயில் தமிழ் விரோதிகளால் ஆந்திராவிற்கு சென்று விட்டது

johnindia said...

naduvula ikkanna potta enna anna? athuvum namma thane kandu pidichom :)

Post a Comment