Tuesday, April 21, 2009

செருப்பு பீதி - தலைவர்கள் கவலை


பொதுவாக தினசரி செய்தித்தாள்கள் என்றாலே களவு, கற்பழிப்பு, கொலை மற்றும் பரபரப்பு செய்திகள் என்ற பெயரில் உப்புச் சப்பில்லாத செய்திகள் (சாம்பிளுக்கு: நமீதாவுக்கு வயிற்றுவலி, இரசிகர்கள் கவலை) இவைதான் நாம் அன்றாடம் பார்ப்பது. அந்தந்த சீசனுக்கு தகுந்தாற்போல மற்ற செய்திகளும் வரும். இப்போ தேர்தல் காலம் என்பதால் தேர்தல் செய்திகளுக்கு பஞ்சமில்லை. அரசியல் காமெடிகளுக்கும் குறைவில்லை.

ஆனால் இப்போது தேர்தலில் வெற்றி தோல்வி என்பதை விட செருப்படி குறித்துதான் ஒவ்வொரு தலைவர்களும் பெரும் பயத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஜார்ஜ்புஷ் மீது செருப்பு வீசியதை (வாழ்க அந்த புண்ணியவான்) நம் மக்கள் சின்சியராக பின்பற்றத் துவங்கியதுதான் அதற்குக் காரணமாம்.

இதுவரை செருப்பு ஆயுதத்துக்கு இலக்கானவர்கள்
1. மத்திய உள்துறை அமைச்சர்- ப.சிதம்பரம்
2. காங்கிரஸ் எம்.பி- ஜின்டால்
3. பிஜேபி பிரதம வேட்பாளர் -எல்.கே.அத்வானி
இப்போ லேட்டஸ்டா நேற்று ஒருத்தர் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறார். அடுத்து யாரோ?????????
பெயரெல்லாம் கேட்கக் கூடாது. ஒழுங்கா பேப்பர் வாங்கிப் படிங்க.

இது போதாதென்று மிக வலிமையானவர் என்று பெயரெடுத்த குஜராத் முதல்வர் நரேந்திரமோடி நேற்று செருப்பு தாக்குதலுக்குப் பயந்து பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே ஒரு பாதுகப்பு வலை பின்னி வைத்து அதிற்குள் இருந்து தேர்தல் பிரசாரம் செய்தாராம். இப்போது அரசியல் தலைவர்கள் செருப்பு தாக்குதலிலிருந்து தப்பிப்பது எவ்வாறு(லேனா தமிழ்வாணன் கூட ஒரு புத்தகம் தயார் செய்து கொண்டிருப்பதாக கேள்வி) என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். ஆகவே தலைவர்களும் பிரசார பீரங்கிகளும் மிகுந்த ஜாக்கிரதையாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

அஸ்கு: என்னன்னே தேர்தலில் செருப்பு மேட்டர் இவ்வளவு முக்கியமானதா?

பிஸ்கு: இருக்காதா பின்ன. செருப்பு வீசப் பட்டா உடனே செய்திகளில் ரொம்ப போகஸ் ஆவதால் இப்போ சில ஊர்பேர் தெரியாத கட்சிகள் எல்லாம் தங்கள் மீது யாராவது செருப்பு வீச மாட்டார்களா? நாமும் பாப்புலர் ஆகமாட்டோமா என்று ஏங்குகிறார்களே!

அஸ்கு: எந்தக் கட்சிக்காவது செருப்பு தேர்தல் சின்னமாக இருக்கா?

பிஸ்கு: எனக்கு தெரியலை. ஆனால் செருப்பு கொஞ்சம் கொஞ்சமா மக்கள் சின்னமா மாறிக்கிட்டிருக்கு என்பதுதான் உண்மை.

அஸ்கு: அப்போ நாம வீசுவதற்கென்றே ஸ்பெசலா செருப்பு தயாரிப்போமாண்ணே ?

1 comment:

johnindia said...

en ellarum ippadi seruppa waste panranga?

Post a Comment