Monday, April 20, 2009

இதுவரை ப்ளாக் எழுதாதவர்களுக்கு இந்தப் பதிவு

நீங்கள் இதுவரை எந்த ப்ளாக்கும் எழுதாமல் பராக் பராக் என வேடிக்கை பார்த்து செல்பவரா? எப்படி எழுதுவது என்று தெரியவில்லையா? கவலையே வேண்டாம். உங்களுக்கும் சக ப்ளாக்கிகளுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.

நீங்கள் இதுவரை ப்ளாக் எதுவும் எழுதவில்லை யெனில்
நீங்கள் செய்ய வேண்டியவை


முதலாவது தயவு செய்து அவசரப்பட்டு உடனே ப்ளாக் ஆரம்பித்துவிடாதீர்கள். ( நாங்களெல்ல்லாம் இப்போதான் கடை விரிச்சிருக்கோம் மக்கா). அதனால எங்களைப் போன்றவர்களின் வலைப் பதிவுகளை மாய்ந்து மாய்ந்து படிக்கவும். விளையாட்டுக்கு இதைச் சொல்ல வில்லை. சீரியசாக சொல்கிறேன். நிறைய படிக்கும் போதுதான் எழுதுவதற்கான கருப்பொருள்கள் புதிதாக கிடைக்கும். அல்லது (என்னைப் போன்று) கருப்பொருளை காப்பியடிக்க வசதியாக இருக்கும். மேலும் பல ஐடியாக்கள் மனதில் பளிச்சிடும்(எப்படி காப்பியடிப்பது என்று!!!).

இரண்டாவது முக்கியமானது
நீங்கள் நினைத்ததையெல்லாம் எழுதினால் நல்லதுதான். வாசிக்கிற மற்றவர்களுக்கு அது புரியவேண்டும் மேலும் சுவராசியமானதாகவும் இருக்க வேண்டும். இல்லையேல் சுப்பிரசனியமாமி அட எழுத்துப் பிழை.......:)(: சுப்பிரமணியசாமி (இவர் அறிவாளி என்பதில் சந்தேகமேயில்லை) அடிக்கடி உளறுவது போல ஆகிவிடும். குறைந்தது ஓரிருமுறையாவது யோசித்துப் பார்த்து பின்பு எழுதி அதையும் பலமுறை வாசித்துப் பார்த்து பதிவிட்டால் வாசிக்க நல்லாயிருக்கும். இல்ல காமிடியாகிடும். அப்புறம் ஜிகிடி பகிடிதான்.

முடிவானது ஆனால் முத்தாய்ப்பானது:
நல்ல கலைஞனுக்கு மிகவும் முக்கியமானது என பல மகான்கள் (என்னையும் சேர்த்துதான்ப்பா) சொல்பவை:
உங்கள் ஐம்புலன்களும் ஆறாவது அறிவும் கூட விழிப்பாக இருக்க வேண்டும். வேறுவகையில் சொல்வதானால் உங்கள் கண்களும் காதும் திறந்திருக்கட்டும். இதுக்கு மேல எல்லாம் விளக்க முடியாது. முடியலை.

இந்த தகவல் கொஞ்சமாவது பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்தையும் ஓட்டையும் நங்கென்று குத்தி செல்லுங்கள். மாறாக தலைப்பை பார்த்து ஆர்வக் கோளாறில் வந்துட்டோம். புதுசா சொல்ல ஒன்னுமில்லையென்றால் நல்லா நாலுவார்த்தை திட்டிட்டு போங்க. நான் மோதிரக் கையால் குட்டுன்னு நினைச்சுக்குறேன். அப்படியாவது புத்திவருதான்னு பார்ப்போம்.



அஸ்கு: என்னண்ணே இப்படி சீரியஸாக எல்லாம் எழுதுறீங்க? என்னாச்சு. உங்க ஊரில் வெயில் எப்படி?

பிஸ்கு: அப்பப்ப பொதுச் சேவைங்கிற பேரல ஏதாவது செய்யணும் இல்லன்னா நடிக்கவாவது செய்யணும். செய்யாட்டி கப்பல் கவுந்துடும்.

அஸ்கு: இதெல்லாம் எங்கே கத்துக்குறீங்க?

பிஸ்கு: எல்லாம் நம்ம தலைவரு த்மிழினக் காவலரு அவரு கலைஞரு

அஸ்கு: மேலே சொன்னது போக வேறெதாச்சும் இருக்கா?

பிஸ்கு: சொல்ல நிறைய விசயம் இருக்கு. என்ன கேட்பதற்குத்தான் ஆள் வேண்டும். எனக்கு நீ இருக்க அதனால சொல்றேன்.

எந்த விசயத்தையும் மாறுபட்ட கண்ணோட்டத்துல அணுகினால் நாம் அந்தக் காரியத்தில் வெற்றி பெறுவது மிகச் சுலபம். இதற்கு லாட்டரல் திங்கிங்(Lateral thinking) என்று சொல்வார்கள். அதனால இன்மேல் நீ என்னிடம் கேள்வி கேட்கும் போது கொஞ்சமாவது யோசிப்பா அஸ்கு.

அஸ்கு: சரின்னே . அப்ப ஒரு கேள்வி கேட்குறேன். நீங்க இதுவரை சொன்னது எல்லாம் மெய்யாலுமே உண்மையா அல்லது..............?????????

21 comments:

Thamira said...

முதல் பாராவை ரசித்தேன்..

அஸ்குபிஸ்கு said...

ஆதி அண்ணா உங்கள் வரவு நல்வரவாகுக. தங்கள் இரசனைக்கு நன்றி

இரவுப் பறவை said...

இப்பொழுது தான் பிளாக் ஐ ஆரம்பித்து விட்டு தமிழ் மணத்திற்கு வந்தேன்.....

ஒருவேளை உங்கள் இடுகையை பார்த்திருந்தால் ஆரம்பித்திருக்க மாட்டேனோ????

அது ஒரு மூலையில் கிடக்கட்டும்

உங்கள் இடுகை தொடர வாழ்த்துக்கள்.......

அஸ்குபிஸ்கு said...

என்ன சகா இப்படி சொல்லிட்டீக. கொஞ்சம் ஓவரா எழுதிட்டேனோ? உங்க எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள்

நிகழ்காலத்தில்... said...

\\எந்த விசயத்தையும் மாறுபட்ட கண்ணோட்டத்துல அணுகினால் நாம் அந்தக் காரியத்தில் வெற்றி பெறுவது மிகச் சுலபம். இதற்கு லாட்டரல் திங்கிங்(Lateral thinking) என்று சொல்வார்கள்.\\

வாழ்த்துக்கள்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அசத்துங்க தல

Raju said...

வுடு ஜூட்டு..!
அடிச்சு ஆடுங்க பாசு..!

Cable சங்கர் said...

//அஸ்கு: சரின்னே . அப்ப ஒரு கேள்வி கேட்குறேன். நீங்க இதுவரை சொன்னது எல்லாம் மெய்யாலுமே உண்மையா அல்லது..............????????? //

லேட்டரல் திங்கிங்.. ???!!!!!

Raju said...

Word Verfication ஐ எடுத்துருங்க தல...

அஸ்குபிஸ்கு said...

அறிவே தெய்வம் said...

\\எந்த விசயத்தையும் மாறுபட்ட கண்ணோட்டத்துல அணுகினால் நாம் அந்தக் காரியத்தில் வெற்றி பெறுவது மிகச் சுலபம். இதற்கு லாட்டரல் திங்கிங்(Lateral thinking) என்று சொல்வார்கள்.\\

வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்களுக்கு நன்றிங்கண்ணா

SUREஷ் said...

அசத்துங்க தல

அஸ்குபிஸ்கு said...

இன்னும் அசத்துவோம்ல உங்க ஆதரவுல
ஏன்னா நான் ஊட்டி வளர்த்த வீட்டு மரம் இல்ல......... தானா வளர்ந்த காட்டு மரம்......ஹி....ஹி......ஹி.
கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்

அஸ்குபிஸ்கு said...

வாழ்த்தின டக்ளஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

என்ன cable sankaru என்னை வைத்து காமிடி கிமிடி எதும பண்ணலையே

Suresh said...

முதல் பாரா அருமை ஹா ஹா சரி i will be ur follower machan, but i started blogging without reading much...

அஸ்குபிஸ்கு said...

Then சுரேஸ் மாப்பிள்ளையாகிட்டீங்க. இனிமே உரிமையா வந்து கலாய்ங்க

JohnIndia said...

blog arambichu konjam posts-laye ivlo weight kattureenga.. nadathunga anna. vazhthukkal :)

அஸ்குபிஸ்கு said...

thank you forur blessing john anna

அன்புடன் அருணா said...

வாங்க...வாங்க கலக்குங்க!!!
அன்புடன் அருணா

Anonymous said...

தல அசத்திருங்கல................ வாழ்த்துக்கள் தல வாழ்த்துக்கள் தல ..........

கோவி.கண்ணன் said...

//நிறைய படிக்கும் போதுதான் எழுதுவதற்கான கருப்பொருள்கள் புதிதாக கிடைக்கும்.//

உண்மைதான்

வெத்து வேட்டு said...

நான் ஏற்கனவே வெத்து இதுல நீங்க பதிவு போட்டு வேற திட்டனும தல

வினோத்குமார் said...

neenga romba comedy pannuveengalo

Post a Comment