Monday, April 20, 2009

அதிமுகவின் புதிய கொ.ப.செ வைகோ


அரசியல் ஆடுபுலி ஆட்டங்களில் என்னவேணாலும் நடக்கலாம். சொந்த இலாபத்துக்காக எவருக்காகவும் வக்காலத்து வாங்குவான் அரசியல் தமிழன். இவர்களையும் இவர்கள் சொரியும் (பண) முதலைக்கண்ணீரையும் கண்டு ஏமாற வேண்டும் என்பது த்மிழனின் தலைவிதி போலும். நெஞ்சம் பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைக்கையிலே என்று பாரதியார் புலம்பினது போல புலம்பி பின்பு குழம்பி எவனுக்காவது ஓட்டைப் போடுகிறோம்.

Vaiko proposes Jayalalitha for prime ministership (IANS)
நேற்று விடுதலைப் புலிகளின் உண்மையான் ஆதரவாளர் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் திருவாளர் வைகோ அவர்கள் வழக்கம் போல முழங்கினார். அத்துடன் அதிமுக அம்மாவை மத்தியில் அரியணை ஏற்றுவோம் என்று சூளுரைத்திருக்கிறார். முன்பெல்லாம் வைகோ பேசினால் நமக்கெல்லாம் நாடி நரம்பு புடைக்கும். இப்போது அவருக்கு மட்டும்தான் அது நடக்கிறது. நமக்கு எரிச்சல்தான் வருகிறது.

அம்மாவின் நிஜ முகம் எவரும் அறிவார். காரியம் முடிந்ததும் எவரையும் காலில் போட்டு மிதிக்கும் அதிமுக தலைவி ஒரு தனிப்பிறவி. ஆனால் கலைஞர் அப்படியல்ல. கூடவே வைத்துக் கொண்டு வளரவிடமாட்டார்,வெளியேயும் விட மாட்டார். காங்கிரஸ் என்ற ஒரு பெரும் கட்சி (இப்போதல்ல, காமராஜர் காலத்தில்) இப்போது ஷோகேஸ் கட்சியானது எப்படி. அதுதான் அரசியலில் கலைஞரின் இராஜதந்திரம். அம்ம அவர்கள் கட்சியையே காணாமல் போகச் செய்துவிடுவார். மதிமுகவிம் நிலைமை இப்போ அதுதான்.

பொறுத்து பொறுத்து பார்த்தார் வைகோ. தொகுதி ஒதுக்கீட்டிலும் அம்மா ஆப்பு வைத்துவிட்டார்கள். கட்சிக்கு ( நமக்கு நாமே திட்டத்தில் )ஏற்கனவே ஆப்பு வைத்தாயிற்று. இனிமேல் நம் எதிர்காலத்திற்கு ஆப்பு வந்துவிடக் கூடாதே என்ற கவலையில் நேற்று அம்மாவை அரியணை ஏற்ற சபதம் செய்திருக்கிறார்.

இதன் பிண்ணனி என்ன? சற்று ஆராய்வோமா?


இப்போது வைகோ பின்னால் எவருமே இல்லை என்பதுதான் பிரதான பிண்ணணியாம். நம் பின்னால்தான் எவருமே இல்லை. சரி நாமாவது எவர் பின்னாலாவது நிற்போம். அப்போதுதான் (முதுகில்) குத்த வசதியாக இருக்கும் என்று வைகோ முடிவு எடுத்துவிட்டார் போலும். சீக்கிரத்தில் மதிமுக கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் ஐக்கியமாக திட்டம் வேறு. ஏனெனில் கலைஞரிடம் போக முடியாது அல்லவா???!!!

ஆகவே அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை குறி வைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார். அதில் ஒரு இரகசியம் இருக்கு. அது எதற்கு நமக்கு. நம்ம வைகோ அண்ணாச்சிக்கு எப்போதுமே முடியாததை முதலிலேயே பேசி அதை காமெடியாக்கிவிடுவது வழக்கம். உதாரணச் சம்பவங்கள் ஏராளம். இதில் சேதுவும் உள்ளடக்கம்.

வைகோ ஒரு காலத்தில் தமிழகத்தின் தலை விதியை மாற்றக் கூடிய நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார். இப்போது அவருடைய நம்பிக்கை என்ன என்று அவருக்கே தெரியுமா? இப்போதுள்ள அரசியல் காமெடியன்களில் நவரச நாயகன்பட்டத்தை தாராளமாக வைகோவிற்கு வழங்கலாம். நம்ம ஒரிஜினல் நவரச நாயகன் அரசியல் வந்த பின் காமிடி நாயகனாக்கிவிட்டார்.

அஸ்கு: அண்ணே அது என்ன கொ.ப.செ இரகசியம்?

பிஸ்கு: ஓ அதுவா! அதிமுக அரசியல் ஜாதகப் படி யார் கொ.ப.செ ஆக இருக்காங்களோ அவர்கள் தான் அடுத்த தலைவர். (முதலில் எம்ஜியார் அடுத்து ஜெயா அம்மு இப்போ களத்தில் போட்டிக்கு வைகோ)

அஸ்கு: அட இவ்வளவு விசயம் இருக்குதா இதில். என்னமோ போங்கண்ணே உங்களவுக்கு எனக்கு அறிவு இல்ல.

பிஸ்கு: அப்போ தப்பித்தவறி அறிவாலயம் போயிடாத. உனக்கு உள்ளதும் போயிடும்.

7 comments:

ttpian said...

வழக்கம்போல் முக திடீர் பல்டி!
பிரபா நன்பன் இல்லையாம்!
அது சரி....சொக்கத்தங்கம்....நன்பன்,தமிழனுக்கு எப்படி நன்பனாக இருக்க முடியும்?

Anonymous said...

ஈழத்தமிழன்.. ஊறுகாய்

தரமானது .தன்னிகரில்லாதது..தொட்டு நக்கிப்பாருங்கள் .. நக்க.. நக்க.. நாவூறும்...
நக்கியவர்களிற்கு .. வாயூறும்.....வாயூறியவர்களிற்கு பதவி போதையூறும்.

இந்திய அரசியல் வியாபாரத்தில் இன்று ஈழத் தமிழனும்.. அவனது அவலவாழ்வும்தான் ஊறுகாய்...எதிர்கிறவன் ஆதரிக்கிறவன்.. உதவ வேண்டும் என்கிறவன்... உதைக்கவேண்டும் என்கிறவன்....ஆயுததத்தை அள்ளிக்கொடுத்து அழி...என்றுவிட்டு அகிம்சை தேசம் என்கிறவன்... அண்ணா நாமம் வாழ்க என்கிறவன்.. சிறுத்தை என்று விட்டு மியாவ்....என்பவன். ..பாட்டாளிகளிற்கு படம் காட்டுபவன்...குண்டு கோமளவல்லிக்கு குடை பிடித்தும் குறைந்த இடம் பிடித்தவன்..எல்லோருமே தொட்டுக்கொள்கிற ஊறுகாய்தான்.. ஈழத்தமிழன் வாழ்வு.... தமிழகத்தில் அரசியல் சாண(ந)க்கியங்களை அழகாகவே அரங்கேறுகின்றன..

அஸ்குபிஸ்கு said...

ttpian said...

வழக்கம்போல் முக திடீர் பல்டி!
பிரபா நன்பன் இல்லையாம்!
அது சரி....சொக்கத்தங்கம்....நன்பன்,தமிழனுக்கு எப்படி நன்பனாக இருக்க முடியும்?

வாங்க வாங்க அண்ணா வாங்க உங்க கருத்துக்களுக்கு நன்றி

சர்க்கஸ் கோமாளிகளை விட அரசியல் கோமாளிகள் பல்டி அடிப்பதில் வல்லவர்கள் என்பது தெரிந்த விசயம் தானே.

by
AskuBisku

அஸ்குபிஸ்கு said...

ஈழத்தமிழன் அவர்களே

உங்கள் வரிகள் அப்படியே உண்மை. வேறு என்ன சொல்ல. நம்மைப் போன்றவர்கள் நமக்கு புரிந்ததை எழுதினால் புதிதாக யாருக்காவது உண்மை புரிந்துவிடாதா என்கிற நப்பாசைதான்.

Anonymous said...

//இப்போது வைகோ பின்னால் எவருமே இல்லை என்பதுதான் பிரதான பிண்ணணியாம். நம் பின்னால்தான் எவருமே இல்லை. சரி நாமாவது எவர் பின்னாலாவது நிற்போம். அப்போதுதான் (முதுகில்) குத்த வசதியாக இருக்கும் என்று வைகோ முடிவு எடுத்துவிட்டார் போலும். சீக்கிரத்தில் மதிமுக கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் ஐக்கியமாக திட்டம் வேறு. ஏனெனில் கலைஞரிடம் போக முடியாது அல்லவா???!!!//

ரத்தினமான வரிகள்

JohnIndia said...

pinni eduthutteenga anna. dialogues between asku and bisku are funny and very apt for each article.

Kannan said...

மிகவும் அருமை.

Post a Comment